விஜய்க்கு முதலில் திருமணம் செய்யவிருந்தது யாரை தெரியுமா?.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்

சென்னை: Vijay (விஜய்) சங்கீதாவுக்கு பதில் வேறு பெண்ணைத்தான் விஜய் திருமணம் செய்யவிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தம் இதுவரை 600 கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் விமர்சன ரீதியாக படத்துக்கு பின்னடைவுதான் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்து.

Bayilvan Ranganathan has said that Vijay was going to marry another woman instead of Sangeetha

தளபதி 68: லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் பாங்காக்கில் நடந்து முடிந்தது.

குடும்பம் பலம்: விஜய் ஆரம்பத்தில் தந்தையின் துணையோடுதான் சினிமாவுக்குள் வந்தார். அதனாலேயே அவர் வாரிசு நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டது. காலம் செல்ல செல்ல தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு குடும்பம் பக்கபலமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

இயக்குநராகும் மகன்: தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. லைகா பேனரில் ஜேசன் இயக்குநராக அறிமுகமாக விஜய்யின் மனைவி சங்கீதாதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இப்போது மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அதனால்தான் விஜய் நடித்த வாரிசு, லியோ பட விழாக்களுக்கு அவர் வரவில்லை என்ற தகவலும் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

காதல் கதை: சங்கீதா ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை ஒரு ரசிகையாக பார்க்க வந்தார். அப்போது அவரை பார்த்த எஸ்.ஏ.சியும், ஷோபாவும் விஜய்க்கு சங்கீதாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்து விஜய்யிடம் கேட்க அதற்கு அவரும் க்ரீன் சிக்னல் காட்ட இருவருக்குமான திருமணம் நடந்தது. இதற்கிடையே சில முறை இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டபோது ஏற்கனவே ஒருவரையொருவர் காதலிக்கவும் ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விஜய் முதலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

சுரேந்தர் மகள்: அதாவது விஜய்யின் தாய் ஷோபாவின் தம்பி சுரேந்தர். அவர் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக இருந்தவர். அவரது மகளைத்தான் முதலில் விஜய்க்கு திருமணம் செய்துவைக்கும் முடிவில் எஸ்.ஏ.சியும், ஷோபாவும் இருந்ததாகவும் ஆனால் அதற்குள் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்ததாலும்; எஸ்.ஏ.சி, ஷோபாவுக்கும் சங்கீதாவை ரொம்பவே பிடித்துப்போக சுரேந்தரின் மகளை எடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X