சாகுற வயசா இது.. தம்பியை இப்படி விட்டுட்டீங்களே வடிவேலு.. உதவ மனசே வராதா.. பயில்வான் வேதனை!
சென்னை: கோடி கோடியா சொத்து வைத்து இருந்தும் தம்பியை இப்படி சாக விட்டுட்டீங்களே வடிவேலு என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரரான ஜெகதீசன், கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மதுரை ஐரவாதநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

55 வயதே ஆன ஜெகதீசனின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்று முடிந்தது. தம்பியின் மறைவால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலுவின் தம்பி மரணம் குறித்து பேசி உள்ளார். அதில், வடிவேலு மாபெரும் நகைச்சுவை நடிகர், மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், இதை கண்கூடாக நான் பார்த்து இருக்கிறேன். அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
யாருக்கும் தெரியாது: ஆனால், வடிவேலு தனது குடும்பத்தை இதுவரையில் வெளி உலகத்திற்கு காட்டியதே இல்லை. அவருடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், மகன்,மகள் இப்படி எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. அதே போல, தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடந்த போதும் பத்திரிக்கையாளர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகத்தான் செய்தார்.

வடிவேலு நினைத்து இருந்தால்: அது போலத்தான் வடிவேலுவிற்கு ஒரு தம்பி இருப்பதும், அவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளதும் தற்போது தான் தெரியவந்துள்ளது. மறைந்த வடிவேலுவின் தம்பி பார்ப்பதற்கு அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறார். இரண்டு படத்தில் நடித்துள்ள இவரை வடிவேலு நினைத்து இருந்தால், சினிமாவில் நடிகராக்கி இருக்கலாம். ஆனால், வடிவேலு அதை செய்யவில்லை. ஜெகதீசனுக்கு வேறு வேலை இல்லாததால் பிழைப்புக்காக ஜவுளி கடையை நடத்தி வந்துள்ளார்.
சாகுற வயசா இது: வடிவேலு தம்பி 55 வயசுல கல்லீரல் செயல் இழந்து உயிரிழந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சாதாரணமாகி விட்டது. இவர் உதயநிதி இடமோ, மா சுப்பிரமணியத்திடமோ உதவி கேட்டு இருந்தால், நிச்சயம் உதவி செய்து இருப்பார்கள். ஆனால், வடிவேலுவிற்கு உதவ மனம் வரவில்லை. சாகுற வயசா இது...கோடி கோடியா பணம் இருந்தும், தம்பியை இப்படி சாக விட்டுவிட்டார் என்கிற வேதனையில் இதை சொல்கிறேன். மற்றபடி வடிவேலு மீது குற்றம்சாட்டவில்லை என்று பயில்வான் ரங்நாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











