நடிகைகள் ஈஷா யோகா மையத்துக்கு போக காரணம் இதுதானா?.. அந்த பிரபலம் என்னென்ன சொல்றாரு பாருங்க

சென்னை: கோவையில் ஈஷா யோகா மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். அந்த யோகா மையத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் அங்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை பலரும் தொடர்ந்து செல்கிறார்கள். அதிலும் சிவராத்திரி வந்தால் அங்கு லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில்கூட தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் கோவை மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தை நடத்திவருகிறார். அங்கு பெரிய சிவ லிங்கம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார். சிவ பக்தர்கள் ஏராளமானோர் அங்கு குவிவதுண்டு. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் அங்கு வருவது உண்டு. அப்படி வருபவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதுமுண்டு. அங்கு சென்றால் மனதுக்கு ஒருவித அமைதி கிடைப்பதாக பலரும் சொல்வார்கள். அதேசமயம் ஈஷா யோகா மையத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

Bayilvan Ranganathan has talked about why actresses go to Isha Yoga Maiyam

என்ன சர்ச்சை: அதாவது அந்த யோகா மையத்தையும், சிவ வழிபாட்டு தலத்தையும் நிறுவவதற்காக பல ஆயிரம் ஹெக்டேர் அளவிலான காடுகளை ஜக்கி அழித்துவிட்டார் என்றும்; அதன் காரணமாக வன விலங்குகளின் வாழ்விடங்கள் காணாமல் போய்விட்டதாக வன ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் அதனை ஜக்கி வாசுதேவ் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. அதேபோல் அமைதி தேடி வரும் பக்தர்களில் சிலரை ஏதோ செய்து யோகா மையத்தின் கட்டுப்பாட்டிலேயே ஜக்கி தங்க வைத்துவிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

மஹா சிவராத்திரி: இப்படி சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டே போனாலும் அங்கு வருடம் முழுவதும் பக்தர்கள் குழுமுவார்கள். முக்கியமாக சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள். அப்போது நீண்ட மேடையில் ஜக்கி வாசுதேவ் நடனமாட மற்றவர்களும் பக்தி பரவசமடைந்து நடனம் ஆடுவார்கள். அது சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களை சந்தித்த கதைகளும் உண்டு.

இந்த வருட மஹா சிவராத்திரி: அந்தவகையில் இந்த வருடமும் அங்கு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதில் சந்தானம், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் சங்கர் மகாதேவன் தனது மகனுடன் மேடை ஏறி பாடலும் பாடினார். சந்தானமோ கண்ணீர் விட்டபடி பக்தியில் உருக, பூஜா ஹெக்டேவோ உச்சக்கட்ட வைபில் நடனம் ஆடவும் செய்தார். இவர்கள் மட்டுமின்றி கடந்த வருடங்களில் சமந்தா உள்ளிட்டோரும் நடனம் ஆடிய வீடியோ ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சந்தானம் அழுத புகைப்படம் பெரும் ட்ரோலுக்கு உள்ளானது.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ: இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஈஷா யோகா மையத்திற்கு நடிகைகள் ஏன் செல்கிறார்கள் என்பது குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், "நான் எப்போதும் ஒரு விஷயத்தில் சர்ச்சை இருக்கிறதா என்பதை தேடுபவன். அப்படி ஏதாவது கிடைக்கும் என்றுதான் நான் ஈஷா யோகா மையத்துக்கு சென்றேன். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. மாறாக பாசிட்டிவிட்டி வைப்தான் கிடைத்தது.

அதனால்தான் செல்கிறார்கள்: எவ்வளவுதான் பணம் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்தாலும் ஒரு மனிதனுக்கு நிம்மதிதான் முக்கியம். அந்த நிம்மதியை தேடித்தான் நடிகைகள்,நடிகர்கள் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஈஷா யோகா மையத்துக்கு பயில்வான் ரங்கநாதன் சப்போர்ட் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் சர்ச்சைகள் சூழ்ந்த பயில்வான் சர்ச்சைகள் சூழ்ந்த இடத்துக்கு சப்போர்ட் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம். தங்களது நிம்மதிக்காக வனத்தை அழிப்பதோ, வன விலங்குகளின் வாழ்விடத்தை அழிப்பதோ எந்த விதத்திலும் நியாயம் தராது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X