பேண்ட் போடக்கூடாது.. உதவி இயக்குனர்களை கொடுமைப்படுத்திய மாரி செல்வராஜ்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை கொடுமைப் படுத்தினார் என்று பிரபலம் ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜூன் மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

Bayilvan Ranganathan heavily criticized Maamannan director Mari selvaraj

மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டும் வகையில் படம் எடுத்து வருவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களை படுமோசமாக அடிப்பதாகவும் செய்தி வெளியாகி வருகிறது.

அவருக்கு கொழுப்பு: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் மாரி செல்வராஜ் பற்றி பேசி உள்ளார். அதில், நான் மாரி செல்வராஜ் பற்றி கேள்விப்படும் விஷயம் எல்லாம் ரொம்ப அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. அவருக்கு கொழுப்பு, திமிரு அதிகமாகி விட்டது. இயக்குநர் பா ரஞ்சித் சாதி பற்றாளராக இருந்தாலும், அவர் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கக்கூடியவராக இருக்கிறார். ஆனால், மாரி செல்வராஜ் அப்படி இல்லை.

பேண்ட் போடக்கூடாது: மேலும் மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை கண்டபடி அடித்து கொடுமைப்படுத்துவார். அவர்கள் படப்பிடிப்புக்கு பேண்ட் போட்டுவரக்கூடாது, முக்கால் பேண்ட் இல்லை லுங்கி கட்டிக்கொண்டுவர வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

தான் பட்ட கஷ்டத்தை: அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் 30, 40 வயதுடைய பெண்களை ஒரு மணிநேரம் வெயிலில் நிற்கவைத்து பின் போங்க என்று சொல்லிவிடுவாராம். ஏன் சார் இப்படி பண்றீங்க என்று கேட்டால், ஏன் நீங்க வெயிலில் நின்றதே இல்லையா? நான் வெயிலில் பன்னி மேய்த்து இருக்கிறேன் என்று தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் பட வேண்டும் என்று நினைப்பவர் மாரி செல்வராஜ்.

இதெல்லாம் நியாயமா?: அவருடைய வீட்டில் பன்னி போட்டோவை மாட்டிவைத்துவிட்டு, இதுதான் நான் வழிபடும் கடவுள், என் சாமி என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு வருபவர்களை கும்பிட சொல்லுகிறார் இதெல்லாம் நியாயமா? அதே போல மாமன்னன் படத்தில் பன்னி வரும் காட்சியில் வடிவேலு வரவே இல்லை. அவர் நைசாக ஒதுங்கிவிட்டார். ஆனால், மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை பழிவாங்கி விட்டார். அதேபோல, ஒரு பெண் என்று கூட பார்க்காமல் கீர்த்தி சுரேசை பன்னிக்கு முத்தம் கொடுக்க வைத்து இருக்கிறார். இதையெல்லாம் கேட்பதற்கு ஆளே இல்லையா என்று பயில்வான் ரங்கநாதன், மாரிசெல்வராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X