பவதாரிணி திடீர் மரணம்.. மருத்துவரிடம் விசாரணை.. நடந்தது என்ன? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!

சென்னை: பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரின் மரண செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இலங்கையில் பவதாரிணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பவதாரிணி உடலுக்கு பாரதிராஜா, டிரம்ஸ் சிவமணி, அமீர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்

Bayilvan Ranganathan information about Bhavadarinis death

தேனியின் லோயர் கேபம்ப்பில் உள்ள இளையராஜாவின் சொந்த வீட்டில், அவரின் தாயார் சின்னதாய், மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபத்திற்கு அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பவதாரிணி பாடிய மயில் போல பொண்னு ஒண்ணு பாடலை அவரது குடும்பத்தினர் பாடி நிறைவு செய்தனர்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், பவதாரிணி மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். பவதாரிணி புற்றுநோயால் தாக்கப்பட்டு இருந்தார். அவர் புற்றுநோயால் தாக்கப்பட்டது கூட தெரியாமல் இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று இருக்கிறார். மகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்று தெரிந்தோ, தெரியாமலோ, இலங்கையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இசை கச்சேரி நடத்த சென்று இருக்கிறார். பவதாரிணி புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருக்கிறாள், அவளுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை, இளையராஜாவின் குடும்பத்தினர் மீடியாவிற்கு சொல்லவில்லை. இளையராஜா இலங்கை சென்ற ஒரே நாளில் மகள் இயற்கை ஏய்திவிட்டார்.

மருத்துவரிடம் விசாரணை: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இலங்கையில் பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் இலங்கை போலீசார். பவதாரிணி கைவிடப்பட்ட நிலையில் தான் இங்கு வந்தார், நாங்களும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் எந்தவிதமான சிகிச்சையையும் அவரின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

விதியின் விளையாட்டு: இளையராஜாவின் மகள் பவதாரிணி மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் தான் முதன் முதலில் பாடினார். இதையடுத்து பாரதி படத்தில் மயில் போல பெண்ணு ஒன்னு பாடலை பாடியதற்காக தேசிய விருதை பெற்றார். பி சுசிலா, ஜென்சி ஆகியோரின் குரலை குழைத்து எடுத்த தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி தான் பவதாரிணி. அவர் பாடிய அனைத்துப்பாடல்களும் மக்களின் மனதை கவர்ந்தது. இதை எல்லாம் விதியின் விளையாட்டுத்தான் என்று சொல்லவேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X