ரஜினி மாலத்தீவு சென்றதற்கு காரணம் இதுதானா? பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: Rajinikanth Maldives (ரஜினிகாந்த் மாலத்தீவு சென்றதற்கு காரணம்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் திடீரென மாலத்தீவுக்கு சென்றதற்கு இதுதான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மாலத்தீவு சென்றார்.

பத்து நாட்களான மாலத்தீவில் இருந்த ரஜினி தனியாக கடற்கரையில் வாக்கிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

Bayilvan Ranganathan informs about the reason why Rajinikanth went to Maldives

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாலத்தீவு சென்றது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மனம் அமைதியாக இருக்கும் போது தான் இமயமலை செல்ல முடியும். ஆனால் அவர் மனம் இப்போது அமைதியாக இல்லை. அதுவும் இல்லாமல் அந்த இடத்திற்கு செல்ல அவரது உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை. வழக்கமாக அவருடன் ஐஸ்வர்யா செல்வார். இப்போது அவர், லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் இமயமலைப் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இலவச விமான டிக்கெட்: மேலும், மாலத்தீவுக்கு சென்று வருவதற்கான விமான டிக்கெட்டை ஸ்ரீலங்கா ஏர்வேஸ் இலவசமாக வழங்கி உள்ளது. ரஜினி மாலத்தீவுக்கு சென்றார் என்ற செய்தியையும் புகைப்படத்தையும் வெளியிட்டதே ஸ்ரீலங்கா ஏர்வேஸ்தான். மேலும், மாலத்தீவை ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் நினைப்பதால், ரஜினியை இலவசமாக அழைத்து சென்றுள்ளனர். இதை அவர்கள் பெருமையாக பார்க்கின்றனர். இதுவும் ரஜினி மாலத்தீவுக்கு செல்ல ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Bayilvan Ranganathan informs about the reason why Rajinikanth went to Maldives

மனக்கலவை: அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யா தனுஷ் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரஜினிக்கு தனது குடும்பத்தின் மீது எப்போதும் அக்கறை உண்டு. அவர் கமல்ஹாசன் போல தனது குழந்தைகள் மீது அக்கறை இல்லாதவர் இல்லை. அப்படி இருக்கும் போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் மிகுந்த கவலையில் இருக்கிறார்.

வாய்ப்பே இல்லை: ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் உணர்ச்சி வசப்பட்டு பிரிவதாக அறிவித்துவிட்டனர். ஆனால், அதன்பின் விவாகரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருவரும் எந்தக்காரணத்திற்காகவும் விவாகரத்து வாங்கவே மாட்டார்கள். அதற்கு ரஜினி ஒததுக்கொள்ளவே மாட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X