மனைவியின் பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் நடத்தும் ஜெயம் ரவி.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியின் பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.

பெண்களின் கனவு மன்னனான ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.

bayilvan ranganathan interview about actor Jayam ravi family issue

பொன்னியின் செல்வன் :

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில், ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு பாகமாக வெளியானத் இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை அள்ளியது.

பயில்வான் ரங்கநாதன் :

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பல நடிகர், நடிகைகள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி, தனது அப்பா எடிட்டர் மோகனுடன் இல்லை, அவர் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். நடிகர் சூர்யா எப்படி, மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டாரோ அதே போல ஜெயம் ரவியும் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

bayilvan ranganathan interview about actor Jayam ravi family issue

பணக்கார குடும்பம் :

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா, சில படங்களையும், சில தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார். ஜெயம் ரவியின் மாமியார் சாதாரணமானவர் அல்ல. அவர், மைசூர் ராஜாவின் இரண்டாவது மனைவி கல்பனா. அடையாறில் உள்ள பல கோடி மதிப்புள்ள பங்களா மைசூர் ராஜாவிற்கு சொந்தமானதாகும். அவர் கர்நாடகாவில் செட்டிலான போது தனது இரண்டாவது மனைவி கல்பனாவுக்கு இந்த பங்களாவை கொடுத்துவிட்டார்.

bayilvan ranganathan interview about actor Jayam ravi family issue

தனிக் குடித்தனம் :

ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்ததால், பள்ளி கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த நிலையில், இருவரும் காதலித்தனர். திருமணம் செய்தால் ஆர்த்தியைத்தான் திருமணம் செய்வேன் என்று ஜெயம் ரவி அடம் பிடித்ததை அடுத்து, ஜெயம் ரவியின் அப்பா திருமணத்திற்கு சம்மதித்தார். தற்போது, இருவரும் குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக குடித்தனம் நடத்தி வருகின்றனர். இதனால், ஜெயம் ரவியின் அப்பா வருத்தத்தில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X