கணக்கு போடும் அளவுக்கு புருஷனா? அம்பிகா சொன்ன அந்த பதில்.. பயில்வான் சொன்னதை பாருங்க!
சென்னை: 80 கால கட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அம்பிகா. சினிமாவில உச்சத்தில் இருந்த நடிகைக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.
சோட்டாணிக்கரை அம்மா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அம்பிகா. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின், மயமில்லை போலும் என்ற மலையாளப்படத்தில், கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அம்பிகாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது.

நடிகை அம்பிகா: அதன் பிறகு தமிழில் அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில், அம்பிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல், ரஜினி,விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
லிவிங் டுகெதர் வாழ்க்கை: படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அம்பிகா, பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரைவிட்டு பிரிந்து, மீண்டும் சென்னைக்கு வந்தார். மீண்டும் 2000ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய அம்பிகா, பிறகு அவரையும் பிரிந்தார்.
வடிவேலுவுடன் கிசுகிசுவில் சிக்கினார்: விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்த அம்பிகா, அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களில் நடித்தார். நடிகை அம்பிகா மற்றும் நடிகர் வடிவேலு இணைந்து நடித்ததால், அவருடன் கிசுகிசுக்கப்பட்டார். அம்பிகாவைப் போலவே அவரது தங்கை ராதாவைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் கிசுகிசுக்கள் அதிகம் பரவியது. அக்கா தங்கை இருவரும் சேர்ந்து 80,90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தனது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள்.
பயில்வான் ரங்கநாதன்: நடிகை மற்றும் நடிகர்கள் பற்றி பேசும் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை அம்பிகாவிடம் ஒரு செய்தியாளர் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று கேட்க, எனக்கு எத்தனை கணவர்கள் என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று அதிரடியாக பதில் அளித்தார். அந்த பதிலைக்கேட்டு பத்திரிக்கையாளர் ஆடிப்போய்விட்டார். இதை சுட்டிக்காட்டிய பயில்வான் உட்கார்ந்து கணக்குப் போடும் அளவிற்கு அம்பிகாவிற்கு பல கணவர்களா என்று தனது பாணியில் பயில்வான் ரங்கநாதன் நக்கலாக இந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











