சதாவுக்கு இருக்கும் தப்பான பழக்கம்..மார்க்கெட் போக காரணம் இதுதான்..பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கமான பல விஷயத்தை ஒளிவுமறைவு இல்லாமல் பேசி வருகிறார். இந்த வகையில் இவர், நடிகை சதா குறித்தும், அவருக்கு இருக்கும் தப்பான பழக்கம் குறித்து பல அதிர்ச்சியான தகவல்களை பேசி சோஷியல் மீடியாவை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான அந்த படத்தில், பாவாடை தாவணி, கொலுசு அணிந்து கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்தார் நடிகை சதா. இந்த படத்தில் இவர் பேசிய 'போயா போ' வசனமும் இவர் கையை தூக்கி பேசிய விதமும் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கும் டைலாக்காகவே உள்ளது.

Bayilvan ranganathan interview about actress sadha

முதல் படத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்த இவர், ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில், விக்ரமுடன் சேர்ந்து கொண்டு கண்ணும் கண்ணும் நோக்கியா என ஸ்டைலாக ஆட்டம் போட்டார். இதையடுத்து, அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்பே இல்லாததால், சினிமாவில் தென்படுவதே இல்லை. பட வாய்ப்பு இல்லை என்றாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.

விவகாரமான படத்தில் நடித்தார்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சதாவிற்கு மார்க்கெட் சுத்தமாக குறைந்துபோனதால், எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நிலைக்கு போனார். அதுக்கூட பரவாய் இல்லை என்று சொல்லும் அளவிற்கு, டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலைமாதுவாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட சுத்தமாக படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பொழப்புக்காக எதையாவது செய்துதான் ஆகவேண்டும் என்பதால், மும்பையில் Earthlings cafe நடத்தி வருகிறார். லாபகரமாக சென்றுக் கொண்டிருந்த அந்த எர்த்லிங்ஸ் கஃபே மூடப் போறாங்னு லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தப்பான கெட்டப்பழக்கம்: இந்நிலையில், யூடியூபில் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் சதாவிற்கு இருக்கும் தப்பான பழக்கம் குறித்து பேசி உள்ளார். அதில், நடிகை சதாவிற்கு இருக்கும் கெட்ட பழக்கம் தான் அவரது வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. சதா எப்போதும் புகைபிடித்து கொண்டு இருப்பார். ஷூட்டிங் சமயத்தில் கூட புகைப்பிடித்துக்கொண்டே இருப்பார். இதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த தப்பான பழக்கத்திற்கு அவர் அடிமையாக இருந்தார். இதனால் தான், அவருக்கு மார்க்கெட் குறைந்தது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X