பழைய பகை...அல்லு அர்ஜுன் கைதின் பின்னணி.. பயில்வான் சொன்ன பகீர் தகவல்!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. 4-ம் தேதி இரவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இதில், சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அதனால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ரேவதி என்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவரின் ஸ்ரீதேஜ் 9 வயது சிறுவனும் நெரிசலில் சிக்கி தற்போது அவர் கோமாவில் இருக்கிறார்.

இந்த வழக்கில் ஹைதராபாத் போலீஸார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அல்லு அர்ஜுனுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை கூட அல்லு அர்ஜுனால கொண்டாட முடியல, அவரது வீட்டில் மாணவர்கள் புகுந்து, கல், ஆசிட் எல்லாம் வீசி ரகளை செய்துவிட்டார்கள். இதனால், அல்லு அர்ஜுன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். ஆனால், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

Allu Arjun pushpa 2 Bayilvan Ranganathan 2

முன் பகை: ஆனால், தாக்குதல் நடத்திய மாணவர்களின் குழுத் தலைவன் ரேவந்த் ரெட்டியின் விஸ்வாசி என்பதையும், இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது திட்டமிட்ட சதி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறது. அதாவது அண்மையில் நடந்த தேர்தலின் போது அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். இதுதான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

விபரீதமான பேச்சு: அதுமட்டுமல்லாமல்,தெலுங்கானாவில் இருக்கும் தெலுங்கர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு சென்று செட்டில் ஆகி விடுங்கள் என்று ரேவந்த் ரெட்டி பேசி இருக்கிறார். இது மிகப்பெரிய தவறான பேச்சு இதனால் தேசிய ஒருமைப்பாடு பிரச்சனை ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. இது எதுவுமே தெரியாமல் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார்.இந்த விபரீதமான பேச்சுக்காக ராணுவமே உள்ளே வரலாம் அந்த அளவிற்கு அவருடைய பேச்சு தவறானது. அல்லு அர்ஜுன் மீது இருக்கும் கோவத்தை ரேவந்த் ரெட்டி அவர்கள் தெலுங்கு சினிமா நடிகர்கள் மீது ஏன் காட்டுகிறார். இந்த விஷயத்தில் தமிழ் நடிகர்கள் யாரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, அதற்கு காரணம் என்னவென்றால் தமிழ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கானாவில் ஓட வேண்டும் என்பதற்காக தமிழ் நடிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X