தனுஷ் படுத்த படுக்கையாக இருக்கிறாரா? பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தனுஷ், தற்போது, சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். அதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் தனுஷின் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட தனுஷ், பவர் பாண்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததாக சொல்லப்பட்டாலும் படத்தின் பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இதற்கிடையே தனது சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரையும் வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தம்: இதற்கிடையே, இட்லி கடை என்ற படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து,யூடியூப் தளத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.
படுத்த படுக்கையான தனுஷ்: தனுஷ் தயாரித்து நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தனுஷின் சொந்த மாவட்டமான தேனியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அமெரிக்கா சென்றார் தனுஷ். பின் அவர் திரும்பி வந்த போது, அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கு மேல் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











