ஜெயம் ரவிக்கு மும்பையில் இரண்டாவது திருமணமா? வாய்க்கு வந்ததை உளறும் பிரபலம்!

சென்னை: ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்துள்ள ஆர்த்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தார். அதில், இந்த விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் தன்னிச்சையான முடிவு என்று ஆர்த்தி கூறியிருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பேசி இருக்கிறார்.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரவி, அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிய ஜெயம் ரவி, 2009-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இதனால், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார்.

jayam ravi aarthi ravi bayilvan ranganathan

ஜெயம் ரவி, ஆர்த்தி: இதையடுத்து, நடிகர் ஜெயம் ரவி, தானாக முன்வந்து, தனது எக்ஸ் தளத்தில் விவாகரத்து முடிவை அறிவித்தார். அந்த அறிக்கையில், பல்வேறு யோசனைகளுக்கு பின்னரே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். தன்னை சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு எடுத்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, வாய் திறந்த ஆர்த்தி, இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்று கூறியிருந்தார்.

விருப்பம் இல்லை: ஒரு மாதத்திற்கு மேலாகியும் அந்த பஞ்சாயத்து முடியாத நிலையில் இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஜெயம் ரவி காவல் நிலையத்தில் என் பாஸ்போர்ட்,கார் அனைத்தும் ஆர்த்தியிடம் இருப்பதாக சொன்னார். அதன் போலீசார் அதில் தலையிட்டு அனைத்தையும் மீட்டு கொடுத்தனர். அப்போது, ஆர்த்தி இது எப்போதும் ஜெயம்ரவியின் வீடுதான், அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம், நான் ஒரு மாதத்திற்கும் மேலாக அவரிடம் பேச நினைக்கிறேன். ஏன் அவர் போனை எடுக்கவில்லை என்று ஆர்த்தி கூறி இருக்கிறார். ஆர்த்தியின் அம்மா சுஜாதாவும் என் மகளுக்கு இந்த விவாகரத்தில் விருப்பமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

கோர்ட்டில் சொல்லுவார்: அதுபோலத்தான், ஜெயம் ரவியும் ஆர்த்தியும் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். ஆர்த்தி கர்ப்பமாக இருந்த போது, ஜெயம்ரவி வாந்தியை கையில் பிடித்து இருக்கிறார். அதை ஆர்த்தி ஒரு பேட்டியில் கூட சொல்லி இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை ஜெயம்ரவி நிச்சயம் கோர்டில் தான் சொல்லுவார், அது ரொம்ப பர்சனல் ஆன விஷயமாக இருக்கும், அதனால் தான் தற்போது ஜெயம் ரவி அதை சொல்லவில்லை.

இரண்டாவது திருமணமா?: தற்போது, ஜெயம் ரவி மும்பையில் இருக்கிறார், இங்கே இருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்று ஒரு மாறுதலுக்காக தற்போது மும்பையில் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது அதன் ப்ரோமோஷனுக்காவும் அவர் மும்பையில் இருக்கிறார். அதற்குள் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்வாரா என்று பேச்சு எழுந்து வருகிறது. தற்போது இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்கள். ஒரு வேலை ஆர்த்தி, அம்மாவைவிட்டு விட்டு, ஜெயம் ரவி வீட்டுக்கு வந்து வாழ்ந்தால், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இரண்டாவது திருமணம் குறித்து நாம் பேச வேண்டாம் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X