சூர்யாவிற்கு செய்வினை.. மிரட்டும் பெரிய நடிகர்கள்.. கண்டதை உளரும் பயில்வான்!
சென்னை: நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி தோல்விப்படமானது. இதையடுத்து, சூர்யா, ஜோதிகா இருவரும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ் பெற்ற மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அதே போல சூர்யா நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இருவரும் கோவில் கோவிலாக சுற்றி வருவது குறித்து பயில்வான் ரங்கநாதன் பல விஷயத்தை பேசி உள்ளார்.
கிங் 24x7 செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன், அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக சூர்யா நடித்த எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. எதற்கும் துணிந்தவன், படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி இருந்தார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது. அதன்பிறகு விக்ரம்,ராகெட்ரி நம்பி எபக்ட் போன்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

படுதோல்வி: எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு, கடுமையாக வொர்க் அவுட் செய்து, கடும் உழைப்புக்கு பின் வெளியான திரைப்படம் தான் கங்குவா. அந்த திரைப்படத்தில் சிறுத்தை சிவாவின் கதை, திரைக்கதை அனைத்தும் மோசமாக இருந்ததால், படும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வெற்றி பெறவில்லை. கங்குவா படத்தின் பட்ஜெட் 400 கோடி என ஞானவேல் ராஜா கூறி இருந்த நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை.
சூர்யாவிற்கு செய்வினை: இதனால் சூர்யாவின் நிலமையும் மோசமானதை அடுத்து, சூர்யாவிற்கு நேரம் சரியில்லை என்றும், யாராவது செய்வினை வைத்துவிட்டார்களா? என்று பேச்சு பரவலாக பரவி வரும் நிலையில், சூர்யாவை எதிர்த்து சில அரசியல் கட்சிகளும், இரண்டு நடிகர்களும் சதி செய்கிறார்கள் என்று தயாரிப்பாளர் தனஜெயன் குற்றம் சாட்டி இருக்கிறார். இதைதொடர்ந்து, சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து, சண்டியாகத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
கோவில் கோவிலாக: அதற்கு முன்பாக சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து சோழிங்கரில் உள்ள நரசிம்மர் சாமி கோயிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மூகாம்பிகை அம்மன் கோயில் இழந்ததை மீட்டுக்கொடுக்கும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இதையடுத்து, ஜோதிகா தனியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் ஜோதிகா ஒரு இஸ்லாமியர். திருப்பதியில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஜோதிகா மற்றும் எப்படி சுவாமி தரிசனம் செய்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை ஜோதிகா இந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என்றும் தெரியவில்லை.
சண்டி யாகம்:இதைத்தொடர்ந்து, சண்டி யாகம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சண்டி யாகம் என்பது தீவினை, செய்வினை, பல தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகம் கோவில் நடைபெறுகிறதா, சென்னையில் நடைபெறுகிறதா, மும்பையில் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை, அனேகமாக தமிழகத்தில் சூர்யாவும், ஜோதிகா இணைந்து நடத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. எது எப்படி நடந்தாலும் ஏழரைச்சனி சூர்யா, ஜோதிகாவை விட்டு விலகினால் சரி என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோவைப்பார்த்த ரசிகர்கள், கோவிலுக்கு போனது ஒரு குத்தமா என்றும், வாய்க்கு வந்ததை உளறுகிறார் என்றும் கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











