மோகன்லால் அரவணைப்பில் சினிமாவிற்கு வந்த நயன்தாரா.. ஆதாரம் இருக்கு வெளியிடவா.. பயில்வான் பேட்டி!
சென்னை: நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், 10 கோ நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா தனுசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பயில்வான் ரங்கநாதன, நயன்தாராவை சரமாரியான கேள்விகளால் வறுத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் Fine Time Cinema யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா அறிக்கையில் என்ன சொல்கிறார்? ஆவணப்படத்தில் எந்த காட்சியையையும் பயன்படுத்தலாம், வியாபார ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார். முதலில் ஆவணப்படம் என்றால் என்ன? இது என்ன ஆவண படமா? சேரன் சோழன் ஆவண படமா? இல்லை பெரிய அரசியல் கட்சியின் ஆவண படமா? இது ஒரு கல்யாணம். கல்யாணத்தை எப்படி ஒரு ஆவண படமாக வெளியிட முடியும்.

பேசி இருக்கலாமா: நயன்தாராவின் கல்யாண வீடியோ படமாக்கப்பட்டபோது நானும் ரவுடிதான் படத்தின் பாடலையும் காட்சிகளையும் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தனுஷ் அவர்கள் சொல்லி இருக்காரு. அதற்காக இவர்கள் அனுமதி கேட்டும் காத்திருந்தார்கள் அவர் அதற்கு அனுமதி தர, தாமதம் செய்ததால் நயன்தாரா செல்போனில் எடுத்த காட்சியை அந்த கல்யாண வீடியோவில் பயன்படுத்தியிருக்காங்க. செல்போனில் எடுக்கும் வீடியோவை எப்படி அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்த முடியும்.
நயன்தாராவால் வந்த பிரச்சனை: அதேபோல நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து சுற்றிக் கொண்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமானது. இதனால் தயாரிப்பாளரான தனுஷுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தனுஷ், நயன்தாரா மேல் ஆத்திரத்தில் இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த கதைதான். இதற்காக நானும் ரவுடிதான் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா தனுஷிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். அது மட்டும் இல்லாமல் இந்த ஆவணபடத்திற்காக நயன்தாரா 50 கோடி வாங்கி இருக்கிறார். கல்யாணத்தை விற்கும் நயன்தாரா, தனுஷூக்கு பணம் தரக்கூடாதா? தனுஷி சந்தித்து பேசி ஆலோசனை செய்து தொகையை குறைத்து இருக்கலாமே. அப்படி பேசி இருந்தால் தனுஷ் நிச்சயம் அனுமதி அளித்து இருப்பாரே.
மோகன் லால் அரவணைப்பில்: அதே போல அந்த அறிக்கையில் அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் அரவணைப்பில் சினிமாவிற்கு வந்தவர்கள் என்று சொல்லி இருக்கிறாரே. நயன்தாரா எப்படி சினிமாவிற்கு வந்தார். மோகன்லால் அரவணைப்பில் தானே சினிமாவிற்கு வந்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஏனென்றால் மலையாள படத்தில் மோகன்லால் சொல்லித்தான் நயன்தாராவிற்கு சினிமா வாய்ப்பு வந்தது இது யாராலும் மறுக்க முடியாது. அப்போதைய பத்திரிகைகள் பலவற்றிலும் இந்த விஷயம் வந்தது. அதன் பிறகு தான் தமிழுக்கு வந்து, ஐயா படத்தில் நடித்தார். இப்படி இருக்கும்போது. நயன்தாராவே மோகன்லாலின் துணையோடு தான் சினிமாவிற்கு வந்து இருக்கும் போது, இவர் எப்படி தனுஷை விமர்சனம் செய்ய முடியும்.
அப்பா, அண்ணால் தான் தனுஷ் சினிமாவிற்கு வந்தார் என்பதை யாரும் மறுக்க, முடியாது ஆனால், அவரின் திறமை இல்லாமல் இந்த அளவிற்கு வந்து இருக்க முடியாது. இப்போது தனுஷ் குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











