37 நடிகைகளை வேட்டையாடினாரா அந்த நடிகர்? நடிகைகளே போவாங்க.. வரம்பு மீறி பேசிய பயில்வான்!

சென்னை: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியாகி திரைத்துறையை உலுக்கி வருகிறது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்

நடிகர் நிவின் பாலி, வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது

hema committee nivin pauly bayilvan ranganathan

நடிகர் நிவின் பாலி: இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் நிவின் பாலி, என் மீது புகார் கூறிய அந்த பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் அவரைப் பார்த்தது கூட கிடையாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் தவறு செய்யவில்லை என்பதால், தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை உடனடியாக நடத்தினேன். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சட்டப்படி கையாண்டு, புகாருக்கு எதிராகப் போராடுவேன். உண்மையை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என கூறியிருந்தார்.

ஆதாரம் தேவை: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் புகார் கொடுத்து இருக்கா, அந்த பெண் கொடுத்த தேதியில், அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரத்தை காட்டிவிட்டார். இதுபோன்ற பாலியல் ரீதியிலான பிரச்சனை மருத்துவமனை,கல்லூரி, பேருந்து என எந்த இடத்தில் நடந்தாலும் வெளியில் வந்துவிடும். ஆனால், ஒரு அறையில் நடக்கும் போதும், சம்மந்தப்பட்டவர் சொன்னால் தான் அது தெரியும். அப்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்ல வேண்டும், இந்த வழக்கு கோர்ட்டில் நிற்குமா. நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம் தான்.

அட்ஜெஸ்ட்மெண்ட் தான்: நிவின் பாலி மீது 37 பெண்கள் புகார் அளித்து இருக்கிறார்கள், இவராக சென்று யாரையாவது கையைப்பிடித்து இழுத்தாரா? இவர்களாகவே தான் சென்றார்கள். பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களும் ஏன் அப்போதே புகார் அளிக்கவில்லை. நடிகர்களை பொருத்தவரையில் தேடி போக வேண்டிய அவசியமே இல்லை, அவர்களாகவே வந்து விழுவார்கள் இது இந்த மண்ணோட இயல்பு. சினிமாவில் மட்டுமில்லை சின்னத்திரையில் இது நடக்கிறது. இரண்டு சீரியலில் நடித்துவிட்டு, உடனே இரண்டு கோடிக்கு கார் வாங்குவது எப்படி எல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் தான் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X