மணிமேகலை போடும் நாடகம்.. செல்லப்பிள்ளை பிரியங்கா.. எல்லாமே வியாபாரமா? பயில்வான் சொன்ன விஷயம்!
சென்னை: பிரியங்கா - மணிமேகலை இடையேயான மோதல் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. சில விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை பயில்வான் ரங்கநாதன் தெளிவாக வீடியோவில் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதொடங்கியது. இந்த ஐந்தாவது சீசனை, ரக்ஷனும், மணிமேகலை தொகுத்து வழங்கினார்கள். வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக உள்ளார். கடந்த வாரம் சேமி பைனல் முடிந்த நிலையில் இந்த வாரம் பைனல் நடக்க இருக்கிறது. இதில் பிரியங்கா டைட்டிலை வென்றதாக கூறப்படுகிறது.

மணிமேகலை விலகினார்: இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதில் குக்காக இருக்கும், பிரியங்கா தான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது போல் நடந்துகொள்வதாகவும், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்றார் மணிமேகலை. மேலும், நிகழ்ச்சி நிர்வாகம், பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறியதாகவும், இல்லை என்றால் கேரியரே போய்விடும் என்று மிரட்டியதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து இவர்களின் விவகாரம் காட்டுத்தீப்போல பற்றிக்கொண்டது.
வியாபார யுக்தி: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மணிமேகலை பிரியங்கா சண்டை போட்டதை பற்றி ஒட்டுமொத்த இணையமும் பேசிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு நிகழ்ச்சி, அவங்க சண்டை போட்டதற்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்களும் நானும் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டை, காதல்,மோதல் இருந்ததால், அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக மாறியது. அதே அடிப்படையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சண்டை போடும் காட்சியாக மாற்றிவிட்டது விஜய் டிவி. அது அவர்களின் வியாபார தந்திரம்.
நாம இளிச்சவாயா: வீட்டில் நம்ம அம்மாவையோ, மனைவியையோ கோமாளி என்று சொல்லுவோமா. அப்படி ஒரு நிகழ்ச்சிக்கே பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றால் நம்மை எவ்வளவு இளிச்சவாயாக நினைத்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் சண்டை என்று சொல்லி நம்மை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதைப்பார்த்து நாம், மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடாது. அது ஒரு நாடகம்.
எல்லாம் நாடகம்: மற்ற தொலைக்காட்சிகளில் எல்லாம் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், நேர்காணல், பாட்டு போன்றவற்றை ஒளிபரப்புகிறார்கள். ஆனால், இப்படி எந்த ஒரு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் இல்லை என்பதால், சுவாரசியத்திற்காக இதுபோன்ற சண்டையை ஒளிபரப்புகிறது. பிரியங்காவிற்கும் சமைக்க தெரியாது மணிமேகலைக்கும் சமைக்க தெரியாது அப்படி இருக்கும் போது இரண்டு பேரையும் அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி சண்டை போடவைப்பதுதான் விஜய் டிவியின் நோக்கம். அதை செய்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











