திருமணமாகாமலே குழந்தை பெற்றாரா பாக்யராஜின் மகள்.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கியவர் கே பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகளான சரண்யா, எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்த நிலையில் அண்மையில் சரண்யா பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.

நடிகர் பாக்யராஜ் ஆரம்பத்தில்1981ம் ஆண்டு ப்ரவீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் 1983ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்ததை அடுத்து இரண்டாவதாக நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் எம்ஜிஆர் தாலி எடுத்துக்கொடுக்க நடைபெற்றது. பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகளுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உண்டு. பெற்றோரைப் போலவே சினிமாவில் நடிக்க வந்த சாந்தனு, தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

bhagyaraj saranya bhagyaraj bayilvan ranganathan

பயில்வான் ரங்கநாதன்: பாக்யராஜ் தான் இயக்கிய பாரிஜாதம் என்ற படத்தில், தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் சரண்யா எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்ற எதுவுமோ தெரியாமல் மர்மமாக இருந்தது. பலர் அவரை மறந்தே விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான், பல ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார் சரண்யா.

அதில், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அதில், நான் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தேன். நல்லவேளையாக கடைசி நேரத்தில் என் அம்மாவும், அப்பாவும் என்னை காப்பாற்றினார்கள். அதன்பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் சினிமாவிற்கு பின்னால், அம்மா,அப்பாவிற்கு உதவியாக இருந்தேன்.

bhagyaraj saranya bhagyaraj bayilvan ranganathan

நடிக்க தயார்: அம்மா, அப்பாவிடம் இருக்கும் அட்டாச்மென்ட் எனக்கு என் தம்பி மீது இல்லை. எப்போதும் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டுதான் இருப்போம். சாந்தனு சிறு வயது முதல் நடித்து வந்தாலும்,அவனுக்கு என்று பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் அமையாதது வருத்தமாக இருக்கிறது. நான் நடிக்க மாட்டேன் என்று நினைக்கிறார்கள், எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். சினிமாவாக இருந்தாலும், சரி சீரியலாக இருந்தாலும் சரி நடிக்க தயார் என கூறியிருக்கிறார்.

குழந்தையின் தந்தை யார்: அது மட்டுமில்லாமல், மகனை வளர்க்க சிரமப்பட்டேன். குழந்தை பெற்ற பிறகு தான், நம்முடைய அம்மாவும், அப்பாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் செய்த தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள், என்னாலும் மன்னிக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார் சரண்யா. ஆனால், அவர் என்ன தவறு செய்தார், அந்த குழந்தையின் தந்தை யார்? சரண்யா திருமணம் செய்து கொண்டாரா? யாரை திருமணம் செய்து கொண்டார்? இப்போதும் அவருடன் சேர்ந்து வாழ்கிறாரா போன்ற கேள்விகளுக்கு சரண்யா பதில் அளிக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

bhagyaraj saranya bhagyaraj bayilvan ranganathan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X