டயாலிசிஸ் செய்ய ஏன் போகல..போண்டா மணி மறைவுக்கு காரணம் இதுதானா.. பயில்வான் ரங்கநாதன் வேதனை!

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு முக்கியமான காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்திருந்தார்.

வறுமையில் இருந்த போண்டா மணிக்கு திரைப்பிரபலங்கள் பலர் உதவி செய்த நிலையில் நேற்று உயிரிழந்தார். போண்டா மணியின் குடும்பத்திற்கு விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தனர்.

Bayilvan Ranganathan interview about the reason behind the demise of Bonda Mani

அருமை நண்பர்: இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் யூடியூவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் அருமை நண்பர் போண்டா மணி இன்று நம்மோடு இல்லை. என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்களில் போண்டா மணியும் ஒருவர். இலங்கை அகதியாக வந்த போண்டா மணிக்கு இப்போது வரைக்கும் பாஸ்போர்ட் இல்லை. இலங்கையில் இவர் பிறந்து இருந்தாலும், இவர் தமிழ் மீது தீராத பற்று கொண்டவராக இருந்தார்.

திறமையால் உயர்ந்தார்: பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமான போண்டா மணி, தனது திறமையால் ரஜினி,கமல்,தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஒரு நாள் கூட ஓய்வே இல்லாமல் படப்பிடிப்பு கலைநிகழ்ச்சி என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நடிகர் போண்டா மணி. பல படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்த போண்டா மணிக்கு பணத்தை சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு சேர்த்துவைக்க தெரியாதவராக இருந்து இருக்கிறார். இப்போது அவர் இல்லாத நிலையில் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்றே தெரியவில்லை .

கிட்னி செயல் இழந்தது: எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாத போண்டா மணிக்கு கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் செயல் இழந்துவிட்டது. இதனால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக்கொண்டு இருந்தார். இதில் கொடுமையான விஷயம் என்ன வென்றால், இரண்டு முறை கிட்னி கிடைத்த போதும், அது மேட்ச் ஆகாததால், அறுவை சிகிச்சை நடைறொமல் போனது.

டயாலிசிஸ் செய்யல: இதனால், மாததற்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்து வரும் இவருக்கு நேற்று காலை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. இதுகுறித்து அவரது மகன் அப்பா இன்று மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், காசு இல்லாததால், டயாலிசிஸ் செய்யவில்லை. நாளைக்கு போகலாம் என்று சொல்லிய நிலையில் நேற்று இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து,அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.பல நேரங்களில் கடவுள் அவரை காப்பாற்றிய நிலையில், இன்று அவரின் விதி முடிந்து விட்டது என்று கண் கலங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X