கணவரை கழட்டிவிட்டாரா வரலட்சுமி.. தல பொங்கலுக்கு ஏன் வரல.. கொளுத்திப்போட்ட பயில்வான்!

சென்னை: பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, பல பிரபலங்களும் தங்களுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.அந்த வகையில நடிகை வரலட்சுமி என் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் சூரியவம்சத்தில் இடம்பெறும் காட்சி இடம் பெற்று இருந்தது. இதைப்பார்த்த பயில்வான் ரங்கநாதன், வரலட்சுமி சரத்குமார் கணவரை கழட்டிவிட்டாரா என பேசி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் 15 வருடமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் தாய்லாந்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற வரவேற்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

varalakshmi nicholai sachdev bayilvan

வரலட்சுமியின் கணவர் வரவில்லை: இந்நிலையில் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் youtube தளத்தில் அளித்திருக்கும் பேட்டியில், தல பொங்கலுக்கு வரலட்சுமியின் கணவர் நிக்கோலை ஏன் வரவில்லை என்று கேட்டு இணையத்தில் ஒரு செய்தியை கொளுத்தி போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் சரத்குமார் தனது கொட்டிவாக்கம் இல்லத்தில் பொங்கலை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதில், சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி, ராதிகா சரத்குமார், அவரின் மகள் ராயன், ராகுல், வரலட்சுமி மற்றும் பல உறவினர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தலப் பொங்கலுக்கு கண்டிப்பாக வரவேண்டிய வரலட்சுமியின் கணவர் நிக்கோலை வரவில்லை. தல பொங்கலுக்கு நிக்கோலை சரத்குமார் வரவேற்கவில்லையா?அல்லது அழைக்கவில்லையா? என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.

கழட்டிவிட்டாரா?: மேலும் சரத்குமார் வெளியிட்டு இருந்த ஒரு வீடியோவில், சூர்யவம்சம் படத்தில் வரும் குடும்பத்தோடு புகைப்படம் எடுக்கும் காட்சியை காமெடியாக எடுத்து வெளியிட்டு இருந்தார். அதில், மருமகன் சின்னராசு வரவில்லை என்று ராதிகா கேட்க, சரத்குமார் என் குடும்பத்தில் அனைவரும் வந்துவிட்டார்கள் என்று சொல்லும் காட்சி இருந்தது. இதைப்பார்த்த பலர், அப்போ மருமகன் உங்க குடும்பம் இல்லையா? அவரை நீங்கள் ஏற்கவில்லையா? வரலட்சுமி கணவரை கழட்டிவிட்டாரா? என பலர் கேட்டு வருகின்றனர் என பயில்வான் ரங்கநாதன் பேசி இருந்தார்.

இதைப்பார்த்து கடுப்பான இணையவாசிகள்,சரத்குமார் தனது குடும்பத்தோடு சந்தோஷமாக பொங்கலை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவையும் எடுத்து பகிர்ந்து இருக்கிறார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடையாமல், வரலட்சுமி கணவரை கழட்டிவிட்டாரா? என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. இதெல்லாம் ஒரு வேலையா என பலர் பயில்வானை திட்டிதீர்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X