Bayilvan: சிவகார்த்திகேயன் வாய் திறக்க வேண்டும்.. அய்யோ.. பயில்வான் ரங்கநாதன் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: சிவகார்த்திகேயன் துரோகம் செய்தார் என்று டி இமான் கூறியது இணையத்தில் புயலை கிளப்பி வரும் நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் உண்மை குறித்து பயில்வான் ரங்கநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Bayilvan Ranganathan Interview on D Imman And Sivakarthikeyan issue

இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது முடியாது, அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.

அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. பல விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான் என்று கூறியிருந்தார்.

இணையத்தில் பரவும் செய்தி: இமான் இப்படி பட்டும்படாமல் சொன்னது இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது. இமானுக்கு அண்மையில் விவாகரத்தான நிலையில், அந்த விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் மட்டும் தான், உண்மை என்ன என்பது தெரியவரும்.

Bayilvan Ranganathan Interview on D Imman And Sivakarthikeyan issue

இரண்டாவது திருமணம்: பெரும் பேசுபொருளாகி இருக்கும் இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், டி இமான் மோனிகா என்பவருடன் 13 வருடம் வாழ்ந்து இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்குழந்தைககள் இருக்கும் நிலையில் தான் டி இமான் அவரை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இப்போது சொல்ல காரணம் என்ன: இமான் இரண்டாவது திருமணம் செய்த போது, மோனிகாவும் வாய் திறக்கவில்லை, இவரும் வாய் திறக்கவில்லை. ஆனால், இத்தனை வருடம் கழித்து இப்போது ஏன் இதுபற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மார்க்கெட் குறைந்துவிட்டதால் இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை.

கமல்/கௌதமி கதை: இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன், கமல் கௌதமி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். கௌதமிக்கு கமல் பல உதவிகளை செய்து இருக்கிறார். இருந்தாலும், திடீரென்று ஒரு நாள் கௌதமி, என் மகளின் எதிர்காலம் கருதி கமலை பிரிந்து செல்கிறேன் என்று சென்றுவிட்டார். இதை இந்த நேரத்தில் ஏன் சொல்கிறேன் என்று கூட்டி கழித்துப் பாருங்கள் புரியும்.

Bayilvan Ranganathan Interview on D Imman And Sivakarthikeyan issue

சிவகார்த்திகேயன் வாய் திறக்க வேண்டும்: மேலும், இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் மௌனமாக இல்லாமல் ஏதாவது சொன்னால் தான் இதன் உண்மை பிரச்சனை தெரியும். இதே போல டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா முன்வந்து பேசினால்தான் உண்மை தெரியும், ஆனால், அவர் வந்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X