பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்.. பயில்வான் போட்ட குண்டு!
சென்னை: நடிகை தமன்னா பாட்டியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வரும் நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தமன்னாவின் காதலர் வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாக குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஜெயிலர் படத்திற்கு முன்பு வரை இவர் நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-ல் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதில், முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி என அனைத்து கசமுசாவும் இருந்தது. இதில் நடித்ததற்காக தமன்னா கடும் விமர்சனத்திற்கு உள்ளான போதும், தமன்னாவிற்கு நல்ல சம்பளம் கிடைத்தது.

நடிகை தமன்னா: இதையடுத்து தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலில் நடனம் ஆடி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் திருப்பி இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். கடந்த மாதம் தமன்னா நடித்த அரண்மனை திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் கொஞ்சம் கூட கவர்ச்சி இல்லாமல், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த படத்தில் கவர்ச்சி வேண்டும் என்பதற்கான ஒரு குத்து பாடல் இருந்ததும், அந்த பாடலும் படம் முடிந்த பிறகுதான் போடப்பட்டது.
காதலர் விஜய் வர்மா: நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த நிலையில், இருவரும் காதலிப்பதாக ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், கடந்த ஆண்டு தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிப்பதாக பொதுவில் அறிவித்தனர். இவர்கள் தங்களது காதலை அறிவித்ததில் இருந்து, இந்த ஜோடி பாலிவுட்டில் விருப்பமான ஜோடியாக உள்ளனர். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அதிர்ச்சி தகவல்: இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளுவார்கள் என தமன்னாவின் ரசிகர் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், பயில்வான் ரங்கநாதன், விஜய் வர்மா பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது, பாலிவுட்டில் பிரபல நடிகரான விஜய் வர்மா, மற்றொரு நடிகையுடன் டேட்டிங் சென்று கொண்டு இருகிறார், அவருடன் லிவ்விங்டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த நடிகை பிரபல நடிகை சைஃப் அலிகாலின் மகள் சாரா அலிகான்.
சோகத்தில் ரசிகர்கள்: விஜய் வர்மா, சாரா அலிகான் இருவரும் மார்டர் முபாரக் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க் அவுட் ஆகிவிட்டதால் இருவரும் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எல்லாம் வெளிவந்த போது தமன்னா எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார். அவர் சொன்னது தமன்னாவிற்கு வேண்டுமானால் அதிர்ச்சி அளிக்காமல் இருக்கலாம். ஆனால், தமன்னாவின் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











