எளிமையாக நடந்த திருமணம்… விவேக் குடும்பம் மாப்பிள்ளைக்கு கொடுத்த வரதட்சணை!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது மகளுக்கு சென்னையில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து சினிமா மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பல விஷயத்தை பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் என்றென்னும் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் விவேக். காமெடி தான் என்றாலும் அதில் மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் வழங்குவதில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு விவேக்தான் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக தான் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் கிடைத்தது.

Bayilvan Ranganathan Interview on Vivek Daughter Tejaswini Wedding

நகைச்சுவை நடிகர் விவேக்: காமெடி நடிகராக இருந்தாலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் முத்திரை பதித்துள்ள விவேக், வெள்ளைப்பூக்கள், நான் தான் பாலா, உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளுக்கு திருமணம்: இந்நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு தேஸ்வினி என்ற மகள் இருக்கிறார், அவருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு தான் இருந்தார். இதையடுத்து, தேஜஸ்வினிக்கும், பரத் என்பவருக்கும், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் உள்ள விவேக்கின் இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்து இருந்தவர்கள் அனைவருக்கும் விவேக்கின் ஆசைபடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதே போல, மகள் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் முடிந்து மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நட்டு வைத்தனர்.

வாழ்க்கை அப்படித்தான்: ஆடம்பரமே இல்லாமல் நடந்த இந்த திருமணத்தில் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக கொடுத்து இருக்கலாம். அவர் இருந்த இருந்தால் ஒருவேளை அனைவரையும் அழைத்து இருப்பார். ஆனால், அவர் இல்லாததால் அவரது குடும்பத்தினர் யாரையும் அழைக்காமல் திருமணத்தை நடத்திவிட்டனர். உயிரோடு இருக்கும் வரை தான் எல்லாம், சினிமாகாரன் வாழ்க்கையே அப்படித்தான் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X