“பயில்வான் பேச்சு“ ட்விட்டரில் இணைந்த பயில்வான்..இனி ட்விட்டரிலும் குழாயடி சண்டை தான்!
சென்னை : நடிகர், நடிகைகளை சகட்டுமேனிக்கு வசைபாடிவரும் பயில்வான் ரங்கநாதன் ட்விட்டரில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை படுமோசமாக விமர்சித்தும் தொடர்ந்து அப்படியே பேசி வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்
சினிமா பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் நடித்த இவர் தனது பத்திரிக்கையாளர் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறார். தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ள பயில்வான் பல கிசுகிசு தகவல்களை பேசிவருகிறார்.

சரமாரியான கேள்வி
சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் அரைநிர்வாணமாக நடித்த ரேகா நாயர் பற்றி தனது யூடியூப் சேனலில் வரம்பு மீறி பேசியிருந்தார். இதையடுத்து,கிழக்கு கடற்கரை சாலைக்கு உடற்பயிற்சி செய்ய வந்த பயில்வானை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டார் ரேகா. கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல் அவரை கோபத்துடன் அடிக்கவும் பாய்ந்தார்.

சர்ச்சை நாயகன்
அதே போல சீதாராமம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துல்கர் சல்மானிடம், சீதாராமம் என்றால் என்ன, ராமமா..நாமமா என ஏடாகூடமாக கேள்வி கேட்டு வம்பிழுத்தார். அதே போல விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூரி பேசியது பற்றி முதல் ஆளாக முந்திக்கொண்டு கொளுத்திப் போட்டதும் பயில்வான் தான். பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே எதையாவது பேசி அதை சர்ச்சை ஆக்கிவருகிறார் பயில்வான்.

இனி ட்விட்டரிலும் சண்டைதான்
பயில்வான் ரங்கநாதன் தற்போது ட்விட்டரில் "பயில்வான் பேச்சு" என்ற பெயரில் புதிதாக கணக்கு தொடங்கி உள்ளார். அந்த ட்விட்டரில் இதுவரை நான் வெளியிட்டுள்ள விமர்சனங்கள், பரபரப்பான தகவல்கள், யூட்யூப் சேனல்களின் நான் பேசியது என அனைத்தும் இதில் பதிவிடப்படும் என பயில்வான் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேள்விட்ட பல இணையவாசிகள் ட்விட்டரையும் விட்டுவைக்களையாக என்றும், மகாபிரபு நீங்க இங்கையும் வந்துட்டீங்களா என்றும் கிண்டலாக கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











