Bayilvan Ranganathan Kanguva Review: படம் தேறுமா? தேறாதா?.. பயில்வான் ரங்கநாதன் கங்குவா விமர்சனம்!

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் காலை முதலே குவிந்து வருகின்றன. சூர்யா ரசிகர்கள் படம் சூப்பர் என்றும் இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் என்றும் கொண்டாடி வருகின்றனர். மற்றவர்கள் படத்தின் கதையை சிறுத்தை சிவா சொதப்பி விட்டார் என்றும் விஷுவல்ஸ் மற்றும் சூர்யாவின் நடிப்புக்காக தியேட்டரில் ஒருமுறை பார்க்கலாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல நம்ம பயில்வான் ரங்கநாதன் காலையிலேயே கங்குவா படத்தின் வீடியோ விமர்சனத்தையே வெளியிட்டுள்ளார். அதில், கங்குவா படத்தை முடிந்த வரை பாராட்டியும் பாசிட்டிவ் ஆகவே பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

kanguva review bayilvan ranganathan

கங்குவா திரைப்படத்தில் அந்த காலத்தில் இருந்து கலியுகம் (இந்த காலம்) வரை சூர்யாவும் பாபி தியோலும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். கார்த்தி ஸ்பெஷல் கேமியோவாக நடித்து கலக்கியுள்ளார் எனக் கூறியுள்ளார். கங்குவா படம் குறித்து அவர் சொல்லியிருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

கங்குவா நல்லா இருக்கு: சூர்யாவின் உழைப்பும் சிறுத்தை சிவாவின் மெனக்கெடலும் கங்குவா படத்தில் நல்லாவே தெரிகிறது. இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நாமும் நடித்து விடலாம் என்கிற ஆசை சூர்யாவுக்கு வந்த நிலையில், அதிக பொருட்செலவில் கங்குவா படத்தை உருவாக்கியுள்ளனர். படம் பார்க்க நல்லாவே இருக்கு என பயில்வான் ரங்கநாதன் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்.

பாபி தியோல் சூர்யா சண்டை: தீவு ஒன்றில் வசித்து வரும் சூர்யாவின் கூட்டத்துக்கும் பாபி தியோலின் கூட்டத்துக்கும் இடையே மாவீரன் யார் என்பதில் போட்டி நிலவுகிறது. அதற்காக அவர்கள் இருவரும் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சண்டை போட்டு வருகின்றனர். இறுதியில் சூர்யா சிக்ஸ் பேக் காட்டி பாபி தியோலை அடித்து வீழ்த்தினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ரஜினிகாந்துக்காக உருவாக்கப்பட்ட கதையை சூர்யாவுக்கு ஏற்றது போல சிறுத்தை சிவா மாற்றிக் கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

திஷா பதானி கவர்ச்சி: சூர்யா, பாபி தியோலை தொடர்ந்து படத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்ப்பது திஷா பதானியின் கவர்ச்சி தான். குறைந்த நேரமே வந்தாலும் திஷா பதானி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி காமெடி கைகொடுத்திருக்கிறது. கார்த்தி கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் கேமியோவாக நடித்துள்ளார். அதிக பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், போட்ட காசை எடுப்பார்களா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது என சில நெகட்டிவ் கருத்துக்களையும் பயில்வான் கூறியுள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பிரபலமாக மாறியுள்ள பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து புதிய படங்களுக்கு விமர்சனமும் கொடுத்து வருகிறார். படத்தை பார்த்து தான் அவர் விமர்சனம் கொடுக்கிறாரா? அல்லது டிரெய்லரை வைத்தே படங்களுக்கு விமர்சனம் கொடுக்கிறாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். இன்று அதிகாலை மற்ற மாநிலங்களில் கங்குவா படம் வெளியான நிலையில், கோயம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் 7 மணிக்கே அதிகாலை காட்சி வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே கங்குவா விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் நல்ல வெளிச்சமான கார்டனில் உட்கார்ந்துக் கொண்டு எப்படித்தான் சொல்கிறாரோ என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X