இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு நடந்த கொடூரம்.. சொத்து, நிம்மதி எல்லாம் போச்சு.. பயில்வான் பேட்டி!
சென்னை: இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு நடந்த தவறான சிகிச்சையால் சொத்து, நிம்மதி எல்லாத்தையும் இழந்து படாத பாடுபட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களைக் கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவைப் பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
விக்ரமனின் மனைவி: இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் விக்ரமன் புது வசந்தம், சூர்யவம்சம் போன்ற திரைப்படத்தை இயக்கி பிரபல இயக்குநர் ஆனார். பெரும் பணக்காரரான இவர், சென்னை கேகே நகரில் உள்ள பிரபல தியேட்டர் உரிமையாளரின் நெருங்கிய உறவினர் ஆவார்.
குச்சிப்புடி டான்சர்: இவரது மனைவி ஜெயப்பிரியா, பிரபலமான குச்சிப்புடி டான்சர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருகிறார். அவர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தொடர்ந்து படத்தை இயக்கி வந்த விக்ரமன், கடந்த 5 வருடங்களாக எந்த திரைப்படமும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் கடந்த 5வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக வீட்டிலேயே இருக்கிறார்.

சொத்தை விற்று சிகிச்சை: இந்த விஷயமே இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரதா கொடுத்த பேட்டியில் தெளியவந்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து பேட்டி அளித்த விக்ரமன், என் மனைவி 5 வருடமாக எழுந்து நடமாட முடியாமல் இருக்கிறார். அவரின் மருத்துவ செலவுே மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இதுவரை, பல லட்சம் செலவாகி விட்டது. தற்போதுக்கூட மருத்துவ செலவுக்காக பண்ணை வீட்டை விற்க விலை பேசி வருகிறார். அவர் அளித்த கண்ணீர்பேட்டியைப் பார்த்த தமிழக அரசு தானாக மருத்துவ செலவு செய்ய முன்வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











