ஆர்எஸ் சிவாஜி நல்ல மனிதர்.. கடவுள் இப்படி பண்ணிட்டாரே.. கண் கலங்கிய பயில்வான்!
சென்னை: ஆர்.எஸ்.சிவாஜிக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாத நல்ல மனிதர் என்று பயில்வான் ரங்கநாதன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இதையடுத்து, மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் எங்கேயோ போய்ட்டீங்க சார் என்ற வசனம் வரை பிரபலமாக்கியது.
ஆர்.எஸ்.சிவாஜி: இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக நடித்து வந்த இவர் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். இதையடுத்து, 2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில் முக்கியமான ஒரு வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சோகத்தில் தமிழ்சினிமா: இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதியின் சகோதரரான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவரது மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
கண்கலங்கிய பயில்வான்: இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், ஆர்.எஸ்.சிவாஜியின் அப்பா எம்.ஆர்.சந்தானம், சிவாஜி நாடக கம்பேனியில் பணியாற்றினார். சிவாஜி கணேஷின் வலது கரமாக இருந்த எம்.ஆர்.சந்தானம் அவர் மீது இருந்த பற்று காரணமாக தனது இளைய மகனுக்கு சிவாஜி என்று பெயர் வைத்தார்.

கமலின் நண்பர்: எம்.ஆர்.சந்தானத்தின் மூத்த மகன் தான் சந்தான பாரதி அவர் தன்னுடன் அப்பா பெயரை சேர்த்துவைத்துக்கொண்டார். இவர்கள் வீடும் கமல்ஹாசன் வீடும் ஆழ்வார் திருநகரில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால், சந்தான பாரதி,ஆர்.எஸ் சிவாஜி இருவருக்கும் நெருங்கிய நண்பராக உள்ளார் கமல். இதனால், இருவரும் கமலின் அதிகபடங்களில் நடித்துள்ளனர்.
கடவுள் இப்படி பண்ணிட்டாரே: சிக்ரெட், குடி என சிவாஜிக்கு எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லை, சாப்பாட்டைக்கூடி பார்த்து பார்த்துத்தான் சாப்பிடுவார். அதே போல, யாரிடமும் திடீர் என்று பேசமாட்டார். மிகவும் நிதானமாக நிறுத்தி பேசக்கூடிய நல்ல மனிதர். 66 வயது என்பது சாகுற வயசு இல்லை இருந்தாலும், கடவுள் இப்படி பண்ணிட்டாரே என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனையை பகிர்ந்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











