ஒரு மாசம் சொகுசு கப்பலில் ஜப்பானுக்கு பயணம்.. நெப்போலியன் மகன் திருமண ரகசியம்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவில் கிராமத்து கதை அம்சம் கொண்ட கதையை தேர்வு செய்து நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவரின் மூத்த மகன் தனுஷுக்கு நவம்பர் மாதம் ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், பயில்வான் ரங்கநாதன் திருமணம் குறித்து வீடியோவில் பேசி உள்ளார்.
புது நெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் நெப்போலியன், ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட அனைத்து படங்களும் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான படமாகவே உள்ளது. 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் நெப்போலியன்: நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குணால் மற்றும் தனுஷ் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், அவரது மூத்த மகன் தனுஷ் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். அவர் தசை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரால் நடக்க முடியாது. தன் மகன் பாேலவே மற்றவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு மருத்துவமனையை திறந்து அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் நெப்பாேலியன்.
மகனுக்கு திருமணம்: நெப்போலியனின் மூத்த மகனுக்கு 25 வயது ஆனதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நெப்போலியன் உறவுக்கார பெண்ணான, திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவை பேசி முடித்துள்ளார். அக்ஷயாவும் தனுஷூம் போனில் பேசிக்கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தோடு இந்தியா வந்து, வீடியோ காலின் மூலம் நிச்சயத்தை நடத்தினர்.
பலவிதமான சர்ச்சை: இதைத்தொடர்ந்து தனுஷின் திருமணம் குறித்து பலவிதமான செய்திகள் பரவின. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் 12 அல்லது 13 வயதிலேயே இறந்துவிடுவார்கள் என்றும், தனுஷ் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் தான் என டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கிறார். மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கைக்கு உகந்தவர்கள் அல்ல என்ற அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இதை அறிந்து கொண்டு தான் அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதித்தாரா? என்றும், அந்த பெண் பணத்திற்காக சம்மதித்தாரா என்றும் கேள்விகளை எழுப்பி இருந்தார்.
நவம்பரில் திருமணம்: இப்படி நெப்போலியன் மகன் திருமணம் குறித்த சர்ச்சை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, திருமணத்திற்கு வருமாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பல முக்கிய பிரபலங்களை சந்தித்து பத்திரிக்கை கொடுத்தார். பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சடிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. தனுஷ் திருமணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் நடைபெற உள்ளது. இதற்காக கனடாவுக்கு தன் குடும்பத்துடன் வந்த நெப்போலியன் பிறகு கப்பல் மூலம் ஜப்பானுக்கு போகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சொகுசு கப்பலில் பயணம்: இந்நிலையில் இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நவம்பர் மாதம் நடக்க இருக்கும் திருமணத்திற்காக நெப்போலியனின் குடும்பம் செப்டம்பர் 1ந் தேதியே பயணத்தை தொடங்கி அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு அரசுமுறை பயணமாக அமெரிக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவரை வரவேற்றார் நெப்போலியன். அதன் பின் வேன் மூலம் கனடா வந்த நெப்போலியனின் குடும்பம் சொகுசு கப்பலில் பயணத்தை தொடங்கினார்கள். ஜப்பானுக்கு செல்ல 40 நாட்கள் ஆகும் என்பதால், இப்போதே திருமண பயணத்தை அவரது குடும்பத்தினர் தொடங்கி உள்ளனர். இதற்காக மணமகள் அக்ஷயா தமிழகத்தில் இருந்து ஜப்பான் செல்கிறாள். இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு அப்பாவும் செய்யாததை நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷுக்காக செய்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











