வேட்டையனை விமர்சிப்பது தவறு.. தப்பு.. அது வேறு.. இது வேறு.. பயில்வான் ரங்கநாதன் ஓபன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 350 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படம் ரஜினிகாந்தின் படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சங்களில் குறைவாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் படத்திற்காக பாடல்கள் உள்ளிட்ட பல கமர்ஷியல் அம்சங்களை இணைத்துள்ளார். குறிப்பாக இந்தவகையில் படத்தில் இணைக்கப்பட்ட மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

rajinikanth vettaiyan movie bayilvan ranganathan

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், அடுத்தடுத்து மழையால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மழையையொட்டி தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை பார்த்து வருகின்றனர். இதனிடையே கடந்த 5 நாட்களில் வேட்டையன் படத்தின் வசூல் 350 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: முன்னதாக ஜெய்பீம் என்ற சமூக கருத்துள்ள படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் இயக்குநர் டிஜே ஞானவேல். இதனிடையே, அதே போன்றதொரு கதைக்களத்தை அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஜெய் பீம் படம் உருவானவிதம் வேறு மற்றும் வேட்டையன் படத்தின் கதைக்களம் வேறு என்று தற்போது பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தை ஜெய் பீம் படத்தை வைத்து விமர்சிப்பது தவறு, தப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஜினிக்காக டிஜே ஞானவேல் வேட்டையன் படத்தில் பல சமரசங்களை செய்துள்ளதாகவும் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்களை கருத்தில் கொண்டு பல கமர்ஷியல் அம்சங்களை அவர் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதிக வன்முறை காட்சிகள்: படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் என்கவுண்டருக்கான காரணம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த காட்சிகள் சேர்க்கப்பட்டதாக டிஜே ஞானவேல் கூறியுள்ளார். கல்வியும் மருத்துவமும் வியாபாரமயமானதையும் இந்தப் படத்தில் கதைக்களமாக ஞானவேல் எடுத்துக் கொண்டுள்ளதையும் பயில்வான் ரங்கநாதன் சுட்டிக் காட்டியுள்ளார். கமர்ஷியல் படத்திலும் நல்ல விஷயங்களை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக ஞானவேல் மெனக்கெட்டுள்ளதையும் பயில்வான குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி படம்.. ஞானவேல் படம்: வேட்டையன் படம் ரஜினி படமாகவும் அதே நேரத்தில் டிஜே ஞானவேல் படமாகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் பயில்வான் தெவித்துள்ளார். மேலும் பகத் பாசில் கேரக்டரையும் சுட்டிக் காட்டியுள்ளார். வேட்டையன் படம் லைகா நிறுவனத்திற்கு 80 சதவிகிதத்திற்கும் மேல் லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் மூலமாகவே ஏறக்குறைய படம் 500 கோடி ரூபாய்களை தயாரிப்புத் தரப்பிற்கு பெற்றுக் கொடுத்த நிலையில், கடந்த 5 நாட்களிலும் படம் திரையரங்குகளில் வசூலில் சிறப்பாக அமைந்து வருகிறது. தொடர்ந்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X