துணை நடிகர் பேட்டாவிலும் கமிஷன்.. ஈசிஆர் பண்ணை வீட்டில் வடிவேலு செய்த அட்டகாசம்!

சென்னை: நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவின் லீலைகள் குறித்து அவருடைய பண்ணை வீட்டில் நடிகைகளை அழைத்துச் சென்று விடிய விடிய இருந்து விட்டு விடிந்த பிறகு அனுப்பி வைக்கும் பழக்கம் குறித்தும் பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடி மற்றும் உடல்மொழியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருடைய காமெடியை பார்த்து சிரிக்காத நபர்களே இருக்க முடியாது. அதிலும் குழந்தை ரசிகர்கள் இவருக்கு அதிகம். திரைப்படங்களில் காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிகர் வடிவேலுவா இப்படி நிஜ வாழ்க்கையில் மோசமானவராக இருக்கிறார் என்று நீங்களே வியந்து போகும் அளவிற்கு வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த பழகிய நடிகர்கள் அவரைப்பற்றி மோசமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Bayilvan ranganathan open talk about comedy vadivelu

வடிவேலுவின் மறுபக்கம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் கொடுக்கும் பேட்டாவில் கமிஷன் அடித்து, அந்த பணத்தில் சரக்கு வாங்கி அடிக்கக்கூடியவர் வடிவேலு. அவர் நினைத்து இருந்தால், அவருடன் சேர்ந்து நடித்த நடிகர்களுக்கு நல்ல சம்பளம் வாங்கி கொடுத்து இருக்கலாம். ஆனால், அதற்குகூட வடிவேலுவிற்கு மனசு இல்லை. ஒரு படத்தில் இயக்குநர் எனக்கு அவர்கூட நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனால், வடிவேலு என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஈசிஆர் பண்ணை வீட்டில்: அதே போல தன்னுடன் ஒரு படத்தில் ஒரு நடிகை நடித்துவிட்டால், அடுத்த படத்திற்கு வேறு ஒரு நடிகையை பார்ப்பார். அவருக்கு ஈசிஆரில் ஒரு பண்ணை வீடு இருக்கு, அந்த பண்ணை வீட்டிற்கு நடிகைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார். என்ன படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தாலும், மாலை 6 மணி ஆனால் போதும், தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகையை அழைத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்கு சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல், அந்த நடிகைகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ளக்கூடியவர் வடிவேலு.

மகா கஞ்சன்: வடிவேலுக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணமே வராது அவர் மகா கஞ்சன். மற்றவர்களுக்கு உதவி செய்த விவேக், மயில்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். ஆனால், கல் மனசுக்காரன் கஞ்சன் நல்லாத்தான் இருக்காரு, அவரை ஆண்டவன் நல்லாத்தான் வெச்சி இருக்காரு என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X