Bayilvan Ranganathan - குடும்பம் நடத்திய அஞ்சலி.. குடித்துவிட்டு டார்ச்சர் செய்த ஜெய் - பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) அஞ்சலியும், ஜெய்யும் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும் ஜெய்யின் டார்ச்சர் தாங்க முடியாமல் அஞ்சலி பிரிந்துவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அதன் பிறகு அவர் நடித்த சென்னை 600028 படம் அவருக்கு நல்ல பெயரை தந்தது. சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் ஹீரோவாக நடித்தார். அதில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஜெய்யுக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என அசந்துபோயினர். ஆனால் சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்களில் எங்கேயும் எப்போதும் படம் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்தது.

தொடர்ந்து கிசுகிசு: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் அவரை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டது, அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை போன்ற குற்றச்சாட்டு அவரை சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இதுகுறித்து ஜெய் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் தனது பணியில் கவனம் செலுத்திவருகிறார்.
அப்போ அஞ்சலி இப்போ வாணி போஜன்: இந்தச் சூழலில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதே அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஜெய். ஆனால் அதுகுறித்து இரண்டு பேருமே அமைதி காத்தனர். இப்போது வாணி போஜனுடன் ஜெய் லிவிங் டூ கெதரில் இருப்பதாக புதிய கிசுகிசு எழுந்தது. அப்படி வெளியான தகவலுக்கு நடிகை வாணி போஜன் தனது மறுப்பை காத்திரமாக பதிவு செய்திருந்தார். இதனால் அந்த கிசுகிசு முடிவுக்கு வந்தது.

பரபரப்பை பற்ற வைத்த பயில்வான்: இந்நிலையில் ஜெய் - அஞ்சலி குறித்து புதிய பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவர்கள் குறித்து பேசிய பயில்வான், "திருவான்மியூர் பீச்சில் ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து ஒரு ப்ளாட் வாங்கி ஒன்றாக வாழ்ந்துவந்தனர். ஆனால் ஜெய் குடிக்கு அடிமையாகி அஞ்சலியை மன ரீதியாக ரொம்பவே டார்ச்சர் செய்துள்ளார். அவரை எப்படியாவது திருத்த வேண்டும் என எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு சினிமாவைகூட தூக்கி எறிந்தார்.

ஜெய்யை நம்பிய அஞ்சலி: ஜெய் எப்படியும் திருந்திவிடுவார் என அஞ்சலி நம்பினார். ஆனால் ஜெய் குடிப்பழக்கத்தை விடவே இல்லை. இதன் காரணமாக சில சமயங்களில் கார் விபத்துகளில் சிக்கி உயிரும் பிழைத்தார். ஒருகட்டத்தி பொறுமை இழந்த அஞ்சலி இனியும் இவருடன் இருந்தால் தனது வாழ்க்கைகேள்விக்குறியாகி தொலைந்துவிடும் என நினைத்தார். எனவே ஜெய்யை பிரிந்து சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி தனது பங்குக்கு உரிய ப்ளாட்டை விற்றுவிட்டார். இப்போது ஜெய் அவரது தந்தையுடன் இன்னொரு ப்ளாட்டில் வசித்துவருகிறார்" என்றார்.
அஞ்சலியின் புதிய படம்: நடிகை அஞ்சலி இப்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை அஞ்சலி ஏற்றிருந்தார். அந்தப் படத்தில் அஞ்சலி தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











