Bayilvan Ranganathan - நயன்தாரா இப்படி ஆனதற்கு அந்தப் பழக்கம்தான் காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

சென்னை: Nayanthara (நயன்தாரா) சமந்தா, ஆண்ட்ரியா, நயன்தாரா ஆகியோர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது புதிய பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

பத்திரிகையாளர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசுபவர். அவ்ர் அவ்வாறு பேசுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

Bayilvan Ranganathan Open talk about samantha, andrea, Nayanthara

பயில்வானை வைத்து செய்த ரேகா நாயர்: நடிகை ரேகா நாயர் குறித்து ஒருமுறை பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியிருந்தார். இதனையடுத்து எப்போதும் பயில்வான் ரங்கநாதன் நடைபயிற்சி செய்யும் இடத்தில் வைத்து அவரை லாக் செய்த ரேகா நாயர், தன்னை குறித்து பேசியதற்கு ஆதாரம் இருக்கிறத?.. தன்னை குறித்து எப்படி பேசலா? என கேட்டு பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டிய வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

தயாரிப்பாளர் கே.ராஜனிடம் சிக்கிய பயில்வான்: அதேபோல் சினிமா நிகழ்வு ஒன்றில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன் ஏதோ பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பயில்வான் ரங்கநாதனை தயாரிப்பாளர் ராஜன் ஒருமையில் பேசினார். இப்படி பலரிடம் பல இடங்களில் பேச்சு வாங்குபவர்தான் பயில்வான் ரங்கநாதன்

பாலாவை வம்புக்கிழுத்த பயில்வான் ரங்கநாதன்: இயக்குநர் பாலாவும் அவரது மனைவியும் பிரிந்த விஷயத்தை வைத்துக்கொண்டு தனக்கு ஏற்றவாறு பேசினார் பயில்வான் ரங்கநாதன். பாலாவுக்கு சில பழக்கங்கள் இருப்பதாலும் அது தொடர்ந்ததால்தான் அவரது மனைவி மலர் பிரிந்துவிட்டார் எனவும் வீடியோ ஒன்றில் கூறினார். ஆனால் இதற்கும் பலர் கண்டனங்களை பதிவு செய்தனர். ஒருவரது விவாகரத்து விஷயத்தை தேவையில்லாமல் எதற்கு பயில்வான் தலையிடுகிறார் எனவும் கேள்வி எழுப்பினர்.

Bayilvan Ranganathan Open talk about samantha, andrea, Nayanthara

பத்திரிகையாளர்களே பயில்வானுக்கு கண்டனம்: தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசிக்கொண்டிருப்பதால் பத்திரிகையாளர்களுக்குத்தான் அவமானம் என்று பத்திரிகை உலகை சேர்ந்தவர்களே தங்களது கண்டனத்தை வெளிப்படையாக முன்வைப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். ஆனாலும் பயில்வான் தனது போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து அவர் பலரது அந்தரங்க விஷயங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

புதிய வீடியோ: இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "நடிகைகள் வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டக்கூடாது. நல்ல திறமை வேண்டும். நயன் தாராவை பாருங்கள் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆனால் ஆருக்கு திறமை இருந்ததால் கதையின் நாயகியாக இப்போது வளர்ந்திருக்கிறார். சாவித்திரி போன்றவர்கள் எல்லாம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடுவார்கள். கடந்த 15 வருடங்களாக நடிகைகளே குத்தாட்டம் போடுகிறார்கள்.

Bayilvan Ranganathan Open talk about samantha, andrea, Nayanthara

சதை மேல் நம்பிக்கை: நடிகைகளுக்கு இப்போது நடிப்பு மீது நம்பிக்கை போய்விட்டது. சதை மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கவர்ச்சியை குடும்பத்தோடு ரசிக்கலாம். ஆபாசத்தை அப்படி ரசிக்க முடியாது. அந்த கால நடிகைகளான பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா போன்றோர் மஞ்சள் உள்ளிட்டவைகளை வைத்து இயற்கையான மேக்கப் போட்டுக்கொண்டவர்கள்.

ஆனால் இப்போது உள்ளவர்கள் எல்லாம் அமெரிக்காவில், லண்டனில் என்ன மேக்கப் பொருள்கள் இருக்கிறதோ அதை வாங்கி பயன்படுத்துகிறார். அந்த ஊர் சீதோஷ்ண நிலைக்கு அதெல்லாம் ஒத்துவரும். ஆனால் இங்கு எப்படி ஒத்து வரும். ரசாயன பொருள்கள் கலந்த மேக்கப்புகளை போட்டால் முக பாவனை வராது. ஆண்ட்ரியா, சமந்தா, நயன்தாரா போன்றோர் தங்களது முக பொழிவை இழந்துவிட்டதற்கு காரணம் ரசாயன பொருள்கள் கலவை மிகுந்த மேக்கப்புகள்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X