என்னது என் மகள் அப்படிப்பட்டவளா?.. அவ விளங்கவே மாட்டா.. கொதித்தெழுந்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஷகீலா வைத்து செய்துவிட்டார்.
பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரிகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.
வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தபடியே பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பயில்வான் ரங்கநாதன்.
வைத்து செய்த ஷகீலா: அந்த நிகழ்ச்சியை குயிலி தொகுத்து வழங்க; ஷகீலாவும் கலந்துகொண்டார். அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் ஷகீலா, “இவ்வளவு பேசுறீங்களே உங்களது மகள் யாரை காதலிக்கிறார். அவள் காதலிப்பது ஒரு பெண்ணை” என்று கூறினார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதன், 'நாக்கு அழுகிடும்’ என்று சொன்னார். அதற்கு ஷகீலா, உங்களது மகளை பற்றி சொன்னால் வலிக்கிறது அல்லவா அதுபோல்தான் நடிகைகளின் அம்மாக்களுக்கும் இருக்கும் என்று தரமான பதிலடி கொடுத்தார்.
பயில்வான் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “எனது மகளை பற்றி தரக்குறைவாக பேசிய ஷகீலாவின் வாய் அழுகிவிடும். அவ விளங்கவே மாட்டா. எனது மகள் யாரையும் காதலிக்கவும் இல்லை; அவள் தன் பாலின ஈர்ப்பாளரும் இல்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி பேசுவது முறையல்ல” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள், அப்போ நீங்கள் மட்டும் என்ன ஆதாரத்தோடு மற்றவர்களை பற்றி பேசுகிறீர்கள்; உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











