மிட் நைட் ஃபோன்? வீட்டுக்குள் மது?.. அதான் அந்த நடிகைக்கு டைவர்ஸா?.. பிரபலம் கிளப்பிய பஞ்சாயத்து

சென்னை: பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளர் மற்றும் நடிகராக இருந்துவருகிறார். அவர் நடிகர்கள், நடிகைகள் குறித்து பேசும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவை. இருந்தாலும் அவர் பேசுவதற்கு பிரபலங்கள் யாரும் எந்த ரியாக்‌ஷனும் கொடுப்பதில்லை. சாந்தனு, ரேகா நாயர் உள்ளிட்டோர் மட்டும்தான் பயில்வானுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம் இப்படி பேசுவதற்கு பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்ததுண்டு.

சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார்.

Bayilvan Ranganathan Open Talks about Amala Paul And Al vijay

தலைவா: மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சில படங்கள் கிடைத்தாலும் முக்கியமான படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த அந்தப் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. படம் தோல்வியடைந்தாலும் விஜய்யுடன் நடித்த நடிகை என்ற பெயர் கிடைத்ததால் அமலா பாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் அமைந்தன.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

Bayilvan Ranganathan Open Talks about Amala Paul And Al vijay

அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.

Bayilvan Ranganathan Open Talks about Amala Paul And Al vijay

இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். அவர் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சினிமாவை பொறுத்தவரை பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருக்கிறார். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய்யுடன் ஏன் விவாகரத்து நடந்தது என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கின்றார்.

Bayilvan Ranganathan Open Talks about Amala Paul And Al vijay

பயில்வான் வீடியோ: அவர் பேசுகையில், "அமலா பாலை ஏ.எல்.விஜய் திருமணம் செய்துகொண்டது அவரது குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் ஏ.எல்.விஜய் குடும்பம் பாரம்பரியமான குடும்பம். இருந்தாலும் மகனின் காதலை ஏற்றுக்கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு அமலா பாலுக்கு மிட் நைட்டில் ஃபோன் வந்தது. அதுமட்டுமின்றி வீட்டுக்குள் வைத்தே சிகரெட், மது எல்லாம் தொட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் விஜய்யின் தந்தை அழைத்து அந்த பெண்ணால் நம் குடும்ப பெயர் கெட்டுப்போய்விடும் போல என்று சொன்னார். பிறகு ஏ.எல்.விஜய் அமலா பாலை விவாகரத்து செய்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X