ஏம்மா அப்போ இனித்தது.. இப்போ கசக்குதோ?.. ராதிகாவை வம்புக்கிழுத்த பயில்வான் ரங்கநாதன்.. அடங்கமாட்றாரே

சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர். அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா குறித்து பேசியிருக்கும் விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

radhika bayilvan ranganathan

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

தொடர் பஞ்சாயத்து: பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை பல செலிபிரிட்டிகள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர். ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுகின்றனர். முக்கியமாக ரேகா நாயர் நேரடியாக சண்டைக்கே சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராதிகாவின் பதிலடி: சமீபத்தில்கூட ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ராதிகா பேசியதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைமுகமாக பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசும் சிலர் பற்றி காட்டமாக பேசியிருந்தார் ராதிகா. ராதிகா அப்படி பேசியதற்கு பலரும் தங்களது வரவேற்பை கொடுத்திருந்தனர்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ""ராதிகா வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் என்ன ஆனார். இதை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று ராதிகா சொல்கிறார். தகவலை சொல்ல வேண்டுமல்லவா. ராதிகாவுக்கு வெளிநாட்டுக்காரருடன் திருமணம் நடந்தது உண்மைதானே.செய்திகளை சொல்ல வேண்டியது பத்திரிகையாளனின் கடமை. அதனால்தான் ஜனநாயகத்தின் நான்கு தூணில் நாங்கள் நான்காவது தூணாக இருக்கிறோம்.

அப்போ இனித்ததா?: ஆனால் ராதிகாவோ எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். ஏம்மா அதுதானே எங்களது தொழில். ஒருகாலத்தில் ராதிகா மிகச்சிறந்த நடிகை, தத்தி தத்தி அழகாக தமிழ் பேசுகிறார் என்று நாங்கள்தானே எழுதினோம். பசும்பொன் படத்தில் ராதிகா நடித்தபோது, அந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க எந்த நடிகைக்கும் துணிவு இல்லை என்று நான்தானே சொன்னேன். அப்போ எல்லாம் இனித்தது. உண்மையை சொன்னால் இப்போ கசக்குதோ"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X