வரலட்சுமியுடன் திருமணம்.. நிக்கோலாயின் பிளான் இதுதான்.. அடேங்கப்பா.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் தாய்லாந்தில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களில் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த வரலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தாலும்; சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களை வரலட்சுமி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi Nicholai Bayilvan Ranganathan

போடா போடி: ஒருவழியாக சரத்குமாரின் மனம் மாறியதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அந்தப் படத்தில் கலக்கினார். அதன் காரணமாக அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

தாரை தப்பட்டை: அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தாரை தப்பட்டை. இயக்குநர் பாலா இயக்கிய அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தாலும்; வரலட்சுமிக்குள் இருக்கும் மிகச்சிறந்த நடிகை அந்தப் படத்தில் வெளியே வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு; நினைத்தபடி சரளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகள் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.

Varalakshmi Nicholai Bayilvan Ranganathan

காதல்: இதற்கிடையே நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்துவந்ததாக கூறப்பட்டது. பிறகு நிக்கோலாய் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது. மேலும் அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவர்களது காதலுக்கு சரத்குமார் பச்சைக்கொடி காண்பிக்க திருமண வேலைகள் மும்முரமடைந்தன. அரசியல் பிரமுகர்கள் முதல் திரை பிரபலங்கள்வரை பத்திரிகைகள் வைக்கப்பட்டன.

தாய்லாந்தில் திருமணம்: அதன்படி இன்று அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். திருமண வரவேற்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே திருமணத்தையொட்டி நேற்று மற்றும் நேற்று முன் தினம் கொண்டாட்டம் களைகட்டியது.வரலட்சுமிக்கு மெஹந்தி வைக்கும் நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராதிகாவும் தனது மகளுடன் செம டான்ஸ் ஆடினார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் வரலட்சுமியின் திருமணம் குறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "வரலட்சுமியைவிடவும் நிக்கோலாய் சச்தேவ் கோடீஸ்வரர். அவருக்கு மும்பையில் தெரியாத நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களே கிடையாது. அவர் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார். அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. அதற்கு காரணம் நிக்கோலாய்தான். ஏனெனில் தன்னுடைய திருமணம் பிரமாண்டமாக நடக்க வேண்டும். அனைவரும் பார்த்து வாயை பிளக்க வேண்டும் என்ற பிளானில்தான் அவர் இதனை செய்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X