வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடக்கவில்லையா?.. தாயும் வரவில்லை.. பெரிய சோகம்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்அடுத்தியிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

Varalaxmi Nicholai Bayilvan Ranganathan

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.

Varalaxmi Nicholai Bayilvan Ranganathan

வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தது போல் பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்புகூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பயில்வானுக்கும், ஷகீலாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம்: இந்நிலையில் வரலட்சுமியும், நிக்கோலாயும் செய்துகொண்ட திருமணம் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த வீடியோவில் பேசிய அவர், "வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் நடக்கும் என்று கூறினார்கள். ஆனால் அங்கெல்லாம் நடக்கவில்லை. ஏனெனில் அங்கு திருமணம் நடந்தால் இங்கு செல்லாது என்பதால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்கள். அவர்களது திருமணம் சென்னை தாஜ் ஹோட்டலில்தான் நடந்தது.

தாய் வரவில்லை: ரிசப்ஷன் லீலா பேலஸில் நடந்தது. திருமண அழைப்பிதழ் வைக்கப்படும்போதே சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி அதில் பெரிதாக கலந்துகொள்ளவில்லை. திருமணத்துக்கும் சாயா தேவி வரவில்லை என்று சொல்கிறார்கள். அதனால் வரலட்சுமியும் சோகமடைந்துவிட்டார். மேலும் நிக்கோலாய் நினைத்திருந்தால் மும்பை தாஜ் ஹோட்டலிலேயே திருமணத்தை வைத்திருக்கலாம். ஆனால் சென்னை தாஜ் ஹோட்டலில் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

இது உண்மையா?: பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. அதாவது வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில்தான் நடைபெறும் என்று உறுதியாக கூறப்பட்டது. ஆனால் இப்போது பயில்வானோ சென்னையில்தான் நடந்தது என்கிறார். முக்கியமாக சரத்குமாரின் முதல் மனைவி திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டும்படி வரலட்சுமி ஒரு விளக்கம் அளித்தால் என்ன? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X