விஜய் மனைவிதான் நடிகைகளை தேர்வு செய்தார்.. இப்போ இல்லை.. சண்டை ஸ்டார்ட்.. கொளுத்திப்போட்ட பயில்வான்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் ஒரு யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டால் அதில் பல அவதூறுகள் இருக்கும் என்பதுதான் பலரின் கருத்து. அதற்கேற்றபடிதான் அவரது பேச்சும் இருக்கிறது. அதற்கு பல கண்டனங்கள் வலுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பணி வதந்தி பரப்புவதே என்ற நோக்கத்தில்தான் அவர் பேசிவருகிறார். இந்தச் சூழலில் நடிகர் விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்தும் பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப்போட்டிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
பத்திரிகையாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக சினிமாவிலும், சினிமா பத்திரிகையாளராகவும் இருந்துவருகிறார் அவர். அதன் காரணமாக நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்று கூறிக்கொண்டு வீடியோவிலும், பேட்டியிலும் தொடர்ந்து பேசிவருகிறார். அவை பல நேரங்களில் கடும் கண்டனத்தை பெற்றிருந்தாலும்; அதை பற்றியெல்லாம் அவர் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

வாங்கிய பதிலடி: இப்படி தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி பேசிவருகிறார். சினிமா துறையில் யாருக்கேனும் விவாகரத்து நடைபெற்றால் இவருக்கு அனைத்தும் தெரியும் என்பதுபோல் எதையாவது பேசி சர்ச்சையை பற்ற வைப்பார். அதேபோல் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் அங்கும் ஏதாவது சர்ச்சை தீனி கிடைக்கிறதா என்பதை பார்ப்பார். அதற்கு பாலா, விஷால், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோரிடம் தரமான பதிலடியையும் வாங்கியிருக்கிறார் பயில்வான்.
சம்பவம் செய்த பெண்கள்: அதேபோல் நடிகை ராதிகா இவரை காலணியால் அடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதுமட்டுமின்றி நடிகை ரேகா நாயரோ திருவான்மியூரில் வைத்து பயில்வான் ரங்கநாதனை சம்பவமே செய்துவிட்டார். மேலும் அவர் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசினார். சமீபத்தில்கூட நடிகை ஷகீலா ஒரு நிகழ்ச்சியில் வைத்து செய்துவிட்டார். அவர் மட்டுமின்றி மறைந்த நடிகர் சுருளி ராஜனின் மனைவி முத்துலட்சுமியும் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கினார்.
புதிய சர்ச்சை: இப்படி பலரிடம் பதிலடி வாங்கினாலும் தனது சர்ச்சை பேச்சை நிறுத்திக்கொள்ளவே இல்லை பயில்வான். அந்தவகையில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யும், திரிஷாவும் லிவிங் டூ கெதரில் இருக்கிறார்கள் என்று கிசுகிசுவை கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது அப்படியே தணிந்துபோய்விட்டது. அவர்கள் இருவருக்கும் நெருக்கம் இருந்தது உண்மைதான். இருவரும் தொடர்ந்து நடித்ததால் வந்த நெருக்கம் அது.
சங்கீதாதான் தேர்வு செய்தார்: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை அவரது மனைவி சங்கீதாதான் தேர்வு செய்துவந்தார். சமீபகாலமாக சங்கீதாவின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக தனக்கான ஹீரோயின்களை தேர்வு செய்தாராம் விஜய். அன்று முதல்தான் வீட்டில் குழப்பம் நீடிக்கிறதாம். அவ்வப்போது விஜய் வெளிநாடு சென்றுவிடுகிறார். தனது மனைவியை விட்டு பட விழாக்களுக்கு தனியாக வர ஆரம்பித்தார் விஜய். அடுத்து அப்பாவுடன் சண்டை போட்டார். இப்போது சமாதானம் ஆகிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











