உனக்கென்ன இங்கே வேலை?.. திரிஷாவை திட்டினாரா விஜய் அம்மா?.. பற்ற வைத்த பயில்வான்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பல விதமான வதந்திகளை பரப்பினார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயிவ்லான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்: விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.
இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காகத்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்தர் விஜய் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே விஜய்யை பற்றி ஒரு வதந்தி சுற்றிக்கொண்டே இருக்கிறது.
விஜய் - திரிஷா: அதாவது விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பெரும் வதந்திக்கு வழி வகுத்தது. ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
பயில்வான் ரங்கநாதன்: இதற்கிடையே தனது தாய்க்காக சாய் பாபா கோயிலை கட்டிக்கொடுத்தார் விஜய். அங்கு திரிஷாவும் சென்றதாக கூறப்படுகிறது. இநிந்லையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், “தனது தாய்க்காக விஜய் ஆசை ஆசையாக அந்தக் கோயிலை கட்டிக்கொடுத்தார். அங்கு திரிஷாவும் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு அவர் வந்தது ஷோபாவுக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.மேலும் அங்கு இனிமேல் நீ வரக்கூடாது. உனக்கென்ன அங்கு வேலை என்று திரிஷாவை ஷோபா கடுமையாக திட்டியதாகவும் சொல்கிறார்கள். அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











