விஜய்யின் வற்புறுத்தலால் திரிஷா அப்படி செஞ்சாராம்.. காரணம் அரசியல்?.. பிரபலம் சொல்றத கேளுங்களேன்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பல விதமான வதந்திகளை பரப்பினார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் - திரிஷா விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்: விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.

இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காகத்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்தார் விஜய் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே விஜய்யை பற்றி ஒரு வதந்தி சுற்றிக்கொண்டே இருக்கிறது.
விஜய் - திரிஷா: அதாவது சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திரிஷா தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பெரும் வதந்திக்கு வழி வகுத்தது. ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசுகையில், "ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு விஜய் தனக்கான கதாநாயகிகளை தானே செலக்ட் செய்ய ஆரம்பித்தார். திரிஷா இதுவரை எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியதில்லை. ஆனால் விஜய்யின் வற்புறுத்தலின்பேரில் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
எதற்காக வீடு: அதேபோல் விஜய்யின் அலுவலகத்தின் பக்கத்திலேயே திரிஷா வீடு வாங்கியிருக்கிறார். அவர் மட்டுமில்லை கீர்த்தி சுரேஷும் வாங்கியிருக்கிறார். அதற்கு காரணம் விஜய் இல்லை. கடற்கரை காற்றுதான். அதற்காகத்தான் வாங்கியிருக்கிறார்கள். அதேபோல், விஜய்யும் திரிஷாவும் லிஃப்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதை ஒரு மூன்றாம் நபர்தான் எடுத்திருக்கிறார். உடனே அதை வைத்து பலரும் கதை கட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதுதான். விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











