Meena - இரண்டு மணி நேரம்தான்.. மீனாவுக்கு 13 லட்சம் ரூபாய் - டாப் சீக்ரெட் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Meena (மீனா) பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா பற்றிய சீக்ரெட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதன் பிறகு ஹீரோயினாக மாறினார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிறுமியாக இருந்தவர் ரஜினிக்கே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தைத்தனமான முகமும், அட்டகாசமான நடிப்பும் தமிழில் முன்னணி நாயகியாக மாற்றியது. ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த அவர் 40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.

bayilvan Ranganathan Opens up about Actress Meena

முன்னணி நடிகை: என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த மீனா பல படங்களில் நடித்தார். ரஜினி, கமல், அஜித், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் வெற்றிக்கொடி நாட்டினார்.

அட்டகாச கெமிஸ்ட்ரி: மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடனான அவரது கெமிஸ்ட்ரி இன்றுவரை பலருக்கு ஃபேவரைட். ரஜினிக்கு ஜோடியாக நடித்த எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. நடிகர் பிரசன்னாக்கூட ரஜினி - மீனா கெமிஸ்ட்ரிதான் டாப் என சமீபத்தில் கூறியிருந்தார். ரஜினியுடன் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் மீனா. அதனை பார்த்த ரசிகர்கள் பழைய நினைவுகளுக்குள் மூழ்கினர்.

கணவரை இழந்த மீனா: மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் விஜய்க்கு மகளாக தெறி படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மீனாவின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த சூழலில் உடல்நலக்குறைவால் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துவண்ட மீனா; தேற்றிய தோழிகள்: வித்யாசாகர் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீனா ரொம்பவே தவித்துப்போனார். இதனால் வெளியுலகத்துக்கு வருவதை நிறுத்தி வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவானது. இதனையடுத்து அவர் காலத்தில் ஹீரோயின்களாக நடித்த ரம்பா, சங்கீதா, சங்கவி உள்ளிட்ட பலர் மீனாவின் வீட்டுக்கு தொடர்ச்சியாக சென்று அவரை இயல்பு நிலைக்கு மாற்றினர். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகவும் செய்தன.

மீனா 40: பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதை சுத்தமாக நிறுத்திவிட்ட மீனா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் தலை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா திரைத்துறைக்கு வந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை மீனா 40 என்ற பெயரில் விழாவாக கொண்டாடினர். இதில் ரஜினிகாந்த், பிரபுதேவா, பாக்யராஜ், ராஜ்கிரண், ரோஜா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மீனா குறித்து பேசினர்.

bayilvan Ranganathan Opens up about Actress Meena

இரண்டு மணி நேரத்துக்கு 13 லட்சம்: இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் மீனா எப்படி கலந்துகொண்டார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் மீனா மறுத்துவிட்டாராம். ஆனால் விடாமல் முயற்சித்த அந்த யூட்யூப் சேனல், இரவு 8 மணியிலிருந்து 10 மணிவரைதான் நிகழ்ச்சி நடத்துகிறோம். அதற்காக உங்களுக்கு 13 லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறோம் என கூறியதாம். இதனையடுத்து மீனா ஒத்துக்கொண்டாராம்.

bayilvan Ranganathan Opens up about Actress Meena

அதுமட்டுமின்றி, ரஜினியையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தால் இதன் ரீச் நன்றாக இருக்கும் என யூட்யூப் சேனல்காரர்கள் கூற, நான் சொன்னால் ரஜினி சார் உடனே வந்துவிடுவார் என கூறி ரஜினியையும் மீனா அழைத்துவந்தாராம். இந்தத் தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இரண்டு மணி நேரத்துக்கு 13 லட்சம் ரூபாயா என வாய் பிளந்து வந்ருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X