Bayilvan Ranganathan: ரகுவரன் இப்படிப்பட்டவரா.. அதனால் தான் அழிந்தாரா.. பயில்வான் சொன்ன ஷாக் தகவல்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் அவருக்கு பதிலாக ஹீரோவாக நடித்து 100 நாட்கள் ஓட்டியவர் என ரகுவரன் பற்றி பல அரிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

ரஜினிகாந்த் ஏன் தொடர்ந்து ரகுவரன் உடன் இணைந்து நடித்தார் என்றும் கமல்ஹாசன் ஏன் ஒரு படத்தில் கூட ரகுவரன் உடன் இணைந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

 Bayilvan Ranganathan opens up about late actor Raghuvaran bad habbits

மேலும், ரகுவரனுக்கு இருந்த அந்த ஒரு கெட்டப்பழக்கமும் அதனால் தான் அவரது திறமை மொத்தமும் வீணாய்ப் போனதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடித்த ரகுவரன்: இயக்குநர் வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய மைக்கேல் ராஜ் மற்றும் கைநாட்டு படங்களில் ஹீரோவாக ரகுவரன் நடித்தார்.

 Bayilvan Ranganathan opens up about late actor Raghuvaran bad habbits

அந்த இரு படங்களுமே 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தன. மைக்கேல் ராஜ் திரைப்படம் 87ம் ஆண்டும் கைநாட்டு திரைப்படம் 88லும் வெளியானது. ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்காத நிலையில், ரகுவரனை ஹீரோவாக்கி படத்தை ஹிட் கொடுத்தார் வி.சி. குகநாதன் என பயில்வான் ரங்கநாதன் தனது புதிய பேட்டியில் பேசி உள்ளார்.

ரஜினிக்கு பிடித்த வில்லன்: சினிமாவில் எப்போதுமே வில்லன் எந்தளவுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறானோ அந்த அளவுக்கு ஹீரோவுக்கான மாஸ் கிடைக்கும். அதனை ரஜினிகாந்த் நன்கு புரிந்து வைத்திருந்தார். பாட்ஷா என ரகுவரன் சொல்வதே மிரட்டலாக இருக்கும்.

 Bayilvan Ranganathan opens up about late actor Raghuvaran bad habbits

வில்லன்களை ரசிக்க அதிக ரசிகர்கள் இல்லாத நிலையில், ரகுவரனுக்கு என்றே சினிமாவை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டம் கூடியதை அறிந்து வைத்துக் கொண்டு தான் பல படங்களில் ரகுவரன் உடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த்.

கமலுக்கு பொறாமை: ஆனால், ரஜினிகாந்த் மாதிரி கமல் கிடையாது. எங்கே ரஜினியை போல ரகுவரனும் தன்னைத் தாண்டி வளர்ந்து விடுவாரோ என்கிற பொறாமை காரணமாகவே ஒரு படத்தில் கூட ரகுவரன் உடன் அவர் இணைந்து நடிக்கவே இல்லை.

எப்போதுமே கமல்ஹாசன் தன்னை விட திறமைசாலிகளுடன் இணைந்து பணியாற்ற மாட்டார். ஆனால், ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ரகுவரனை தங்கள் படங்களில் கமிட் செய்ய போட்டா போட்டி போட்டனர் என்றார்.

 Bayilvan Ranganathan opens up about late actor Raghuvaran bad habbits

இப்படியொரு கெட்டப்பழக்கம்: நல்லா நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே கையை அறுத்துக் கொண்டு ஒரு படத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் ரகுவரன்.

ஆனால், அவருக்கு இருந்த ஒரே கெட்டப் பழக்கம் என்றால் அது குடி போதை தான். அதனால் தான் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது என்றும் ஒரு கட்டத்தில் குடித்தால் தான் அவர் நடிப்பார் என்றே ஆகி விட்டார் என்றும் பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 Bayilvan Ranganathan opens up about late actor Raghuvaran bad habbits

ரகுவரனை விட்டுப் பிரிந்த ரோகிணி: நடிகை ரோகிணி ரகுவரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அவருக்கு இருந்த அதீத குடிப்பழக்கம் காரணமாகவே அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி பல நல்ல காரியங்களையும் சமூக சிந்தனையுடன் செயல்பட்டவர் ரோகிணி என்றும் தனது பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X