Bayilvan Ranganathan - ரகசிய திருமணம்.. ரெடின் கிங்ஸ்லியை டார்ச்சர் செய்தார் சங்கீதா.. பயில்வான் ஓபன் டாக்

சென்னை: Redin Kingsley Marriage (ரெடின் கிங்ஸ்லி திருமணம்) ரெடின் கிங்ஸ்லியை டார்ச்சர் செய்துதான் திருமணத்துக்கு சங்கீதா ஒத்துக்கொள்ள வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் முதன்முதலாக இயக்கிய வேட்டை மன்னன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. அடிப்படையில் நடன கலைஞரான இவர் நெல்சன் கல்லூரி படிக்கும்போதே பழக்கம். அப்போது ஆரம்பித்த இவர்களது நட்பு பல வருடங்களாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. வேட்டை மன்னன் படம் பாதியிலேயே நின்றதால் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

Bayilvan Ranganathan Opens up About Redin Kingsley Marriage

கோலமாவு கோகிலா: பிறகு ஒருவழியாக நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானதும் அதே படத்தில் நடிகராகவும் ரெடின் அறிமுகமானார். தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி, டயலாக் டெலிவிரி என அதகளம் செய்ததை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன.

காமெடி நடிகர்: கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், எல்கேஜி, கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், காஃபி வித் காதல், ஜெயிலர் என வரிசையாக படங்களில் நடித்தார். ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்திலும் அவரது கேரக்டர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

திருமணம்: இந்த சூழலில் அவர் சீரியல் நடிகை சங்கீதாவை நேற்று திருமணம் செய்துகொண்டார். திடீரென நடந்த அவரது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. அவருக்கு வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர்களது திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

Bayilvan Ranganathan Opens up About Redin Kingsley Marriage

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நடிகர் ஆவதற்கு முன்பே ரெடின் கிங்ஸ்லி குருப் டான்ஸராக இருந்தார். அதுமட்டுமின்றி பொருட்காட்சியில் புதிய புதிய விஷயங்களை செய்து அசத்துபவராகவும் அவர் இருந்தார். 46 வயது ஆகும் அவருக்கு இது முதல் திருமணமா இல்லை எத்தனையாவது திருமணம் என்று தெரியாது.

டார்ச்சர்: எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரை பிரபலங்களுக்குக்கூட பத்திரிகை வைக்காமல் தனது திருமணத்தை மைசூரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகசியமாக வைத்துவிட்டார். இது அவருக்கு முதல் திருமணமா என்பது தெரியாது. சங்கீதா சில படங்களிலும் நடித்திருக்கிறார். அவருடன் ரெடின் ஒரு வருடம் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்தார். சமீபகாலமாக சங்கீதா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரெடின் கிங்ஸ்லியை டார்ச்சர் செய்தார். கவின் நடித்துவரும் ஒரு படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்துவருகிறது. அங்கேயே தனது திருமணத்தை வைத்துக்கொண்டார் ரெடின்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X