Bayilvan: 200 கோடி கேட்பது உண்மையா? மனைவிக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை.. பயில்வான் பளிச்!

சென்னை: தளபதி 68 படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கப் போகிறார் என்கிற பேச்சு தான் கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு பெரிய படங்களை தயாரிக்காமல் இருந்து வந்த ஏஜிஎஸ் நிறுவனம் அத்தனை பணத்தையும் விஜய்யின் அடுத்த படத்திற்காகத்தான் செலவு செய்ய போகின்றனரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் உண்மையாகவே 200 கோடி சம்பளம் கேட்டாரா என்பது குறித்தும் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை இருப்பது உண்மை தானா என்கிற கேள்விக்கும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பதிலை இங்கே பார்க்கலாம் வாங்க..

Bayilvan Ranganathan opens up about Thalapathy 68 200 crore salary and Vijay - Sangeetha issues

விஜய்யின் விக் பற்றி பேசிய பயில்வான்: கமல்ஹாசன் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எல்லாம் செய்துக் கொண்டு செம சூப்பராக இருக்கும் நிலையில், விஜய் ஏன் மோசமான விக்குகளை வைத்து வருகிறார் என்கிற கேள்வியை சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விஜய் ரசிகர்கள் பலரும் பயில்வான் ரங்கநாதனை எந்தளவுக்கு அசிங்கமாக திட்ட முடியுமோ அந்த அளவுக்கு திட்டித் தீர்த்து விட்டனர். இந்நிலையில், இந்த பேட்டியிலும் அந்த கேள்விக்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் எம்ஜிஆருக்கே சில விக்குகள் செட் ஆகவில்லை. அதே போலத்தான் விஜய் சமீபத்தில் வைக்கும் விக்குகள் அவருக்கு பிடித்திருந்தாலும், பார்ப்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று தான் சொன்னேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றார்.

விஜய் 200 கோடி கேட்பது உண்மையா?: ஏஜிஎஸ் நிறுவனமே 175 கோடி சம்பளம் என அதிகபட்ச தொகையை ஆரம்பத்தில் சொன்னதாகவும் ஆனால், அதுவும் பத்தாது என 200 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என நடிகர் விஜய் பேரம் பேசியதாகவும் அதற்கும் சம்மதம் தெரிவித்தே தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க சம்மதித்துள்ளார் என தகவல்கள் பெரும் பரபரப்பை இந்தியளவில் ஏற்படுத்தி உள்ள நிலையில், அது தொடர்பான கேள்விக்கும் பயில்வான் பதில் அளித்துள்ளார்.

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், விஜய் ரஜினிகாந்தையே சம்பளத்தில் தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு சென்று விட்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், சினிமா வட்டாரத்தில் பலரும் 200 கோடி சம்பளம் தான் விஜய் இந்த படத்திற்காக வாங்கப் போகிறார் என்கின்றனர்.

Bayilvan Ranganathan opens up about Thalapathy 68 200 crore salary and Vijay - Sangeetha issues

கடந்த ஒரு வாரமாக இந்த தகவல் தீயாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பு தரப்போ, விஜய் தரப்போ இதை இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனக் கூறியுள்ளார்.

மனைவியுடன் விஜய்க்கு பிரச்சனையா?: மேலும், விஜய் மற்றும் சங்கீதா இருவர் குறித்த வதந்திகள் வருகிறதே அது பற்றி பயில்வானுக்கு ஏதாவது தெரியுமா என தொகுப்பாளர் கேட்க, அது முற்றிலும் பொய்யான வதந்தி தான். விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் இல்லை. மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில், அவர்களை பார்த்துக் கொள்ளத்தான் சங்கீதா வெளிநாட்டில் உள்ளார் என்றும் கூறி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X