Bayilvan Ranganathan On Trisha - போதைக்கு அடிமையாகிவிட்டாரா த்ரிஷா?.. பரபரப்பை பற்ற வைத்த பயில்வான் ரங்கநான்
சென்னை: Bayilvan Ranganathan On Trisha (த்ரிஷா குறித்து பயில்வான் ரங்கநாதன்) நடிகை த்ரிஷா குடித்துவிட்டு சாலையில் ஆட்டம்போட்ட விஷயம் காவல் துறை வரை சென்றதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டில் இருந்துவருகிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். நாவலில் கல்கி படைத்திருந்த குந்தவை கதாபாத்திரத்தை தனது நடிப்பில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் த்ரிஷா.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் த்ரிஷா. விஜய்யும், த்ரிஷாவும் ஆல்டைம் ஃபேவரைட் ஜோடி என பெயர் எடுத்தவர்கள். ஆனால் குருவி படத்துக்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. எனவே பல வருடங்களுக்கு பிறகு திரையில் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்திருப்பதால் அதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
திருமணம் செய்துகொள்ளாத த்ரிஷா: நடிகை த்ரிஷா இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இடையில் வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் திருமணம் நடைபெறவில்லை. அதனையடுத்து திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் செய்துகொள்ளவில்லை. மேலும், தனது மனதுக்கு பிடித்தவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது திருமணம் எனவும் கூறியிருக்கிறார்.

பரபரப்பை பற்ற வைத்த பயில்வான்: இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் த்ரிஷா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், "திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கலாம். த்ரிஷா திருமணம் செய்துகொண்டால் அவரது கணவர் சினிமாவிலிருந்து விலக சொல்வார். இதனால்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவில்லை.
மார்க்கெட் குறைந்துவிடும்: அதுமட்டுமின்றி சமந்தாவுக்கு நடந்த விவாகரத்து திருமணம் பற்றிய விஷயத்தில் த்ரிஷாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டது. மேலும் திருமணம் செய்துகொண்டால் தனது மார்க்கெட் வேல்யூ சரிந்துவிடும் என்றும் அவர் பயப்படுகிறார். இதன் காரணமாகவும் த்ரிஷா திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்.

குடிக்கு அடிமை: த்ரிஷா குடிக்கு அடிமையாகி பல முறை சண்டை போட்ட வீடியோக்களும், குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன. நடிகை த்ரிஷா சென்னையில் இருக்கும் நீலாங்கரை வீட்டில் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் ஆட்டம் போட்டார். அந்த விஷயம் காவல் துறை வரை சென்றது. அதுமட்டுமின்றி போதையில் குத்தாட்டம் போட்ட த்ரிஷா என்ற தலைப்பில் செய்திகளும் வெளியானது.


Click it and Unblock the Notifications











