பின்புறம் சிவக்க சிவக்க அடித்த நடிகர்.. நொந்து போன நடிகை.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவர்களின் சினிமா விஷயம் குறித்தும் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கு படப்பிடிப்பின் போது நடந்த மோசமான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், நடிகை ஸ்வேதா மேனன், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர், அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் கவர்ச்சி படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் இவர். ரதிநிர்வேதம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

பயில்வான் ரங்கநாதன்: அந்த காட்சியில் அந்த நடிகர், என் பின்புறத்தில் அடி அடி என அடித்து சிவந்து விட்டது. இதைத்தொடர்ந்து நான் மருத்துவமனை சென்றேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். அண்மையில் ஸ்வேதா மேனனின் இந்த பேட்டி இணையத்தில், பின்புறம் சிவக்க அடித்த கதாநாயகன் என்ற தலைப்பில் வெளியாகி பல லைக்குகளை பெற்றது என்று பயில்வான் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகை ஸ்வேதா மேனன்: மாடல் அழகியான நடிகை ஸ்வேதா மேனன், 1990ம் ஆண்டு வெளியான மலையாள படமான அனஸ்வரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டிற்கு சென்ற இவருக்கு இஷ்க் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 30க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர், அமீர் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்த ஹம்கோ தும்சே ப்யார் ஹை மற்றும் பந்தன் போன்ற படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும், இவர், மலையாள சினிமாவில் பலேரி மாணிக்யம், சால்ட் என் பெப்பர் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றார்.
ஐட்டம் பாடலுக்கு :படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், சிநேகிதியே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சாதுமிரண்டால் படத்திலும் நான் அவனில்லை இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் இணையதளம் என்ற படத்தில் நடித்தார் அதன் பிறகு இவர் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் வரிசையாக மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
25 முறை ரீ டேக்: அண்மையில் இவர், மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரதிநிர்வேதம் என்ற மலையாள படத்தின் போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசி இருந்தார், அதில், அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சி மட்டும் 25 முறை ரீ டேக் எடுத்தார்கள். அந்த நடிகர் என் பின்புறம் அடித்து அடித்து அந்த இடமே சிவந்து விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ள முடியாததால், இயக்குநரிடம் கோபமாக கத்தினேன் என்று ஸ்வேதா மேனன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது கிசுகிசு வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











