அஜித் சொன்னாரு விஜய் ஆண்டனி சொன்னாரா.. மேடையில் மீண்டும் வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: Bayilvan Ranganathan on Vijay Antony - பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய நிலையில், தயாரிப்பாளர் சங்கம் இரண்டு உள்ளது என்றும் அதில், ஒரு தயாரிப்பாளர் சங்கம் சொல்வது எதுவுமே 4 நாள் கூட செல்லுபடியாகாது என பேசியது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கான்ட்ரவர்ஷியல் கிங் என்றே பட்டம் சூட்டப்பட்டு அந்த நிகழ்ச்சியில் பேச பயில்வான் ரங்கநாதனை அழைத்திருந்தார் தொகுப்பாளினி. மைக்கை பிடித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் தான் எதையுமே ஆதாரமின்றி பேசவில்லை என்றும் தான் உண்மையை உடைத்து பேசுவது சர்ச்சையாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

Bayilvan Ranganathan opens up Ajith informs but, Vijay Antony not in recent meet

கேமராக்காரனை வரக்கூடாதுன்னு ஏன் சொல்றீங்க? என கேட்ட பயில்வான் ரங்கநாதன், விஜய் ஆண்டனி ஏன் அப்படியொரு ட்வீட் போடுறாரு என கேட்டு விளாசி உள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: விஜய் ஆண்டனி வாழ்வில் தொடர்ந்து நடக்கும் சோகங்களுக்கு அவரது திரைப்படங்களின் தலைப்பு நெகட்டிவாக எமன், சைத்தான், கொலை, ரத்தம் என இருப்பது தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல ரசிகர்களும் பயில்வான் ரங்கநாதனை விளாசி எடுத்தனர். இந்நிலையில், மீண்டும் சினிமா மேடையில் விஜய் ஆண்டனி பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Bayilvan Ranganathan opens up Ajith informs but, Vijay Antony not in recent meet

விஜய் ஆண்டனி ட்வீட் போட்டது ஏன்?: சினிமா பிரபலங்களின் மரணத்தை கேமராக்கள் படம் பிடிக்கக் கூடாது என தயாரிப்பு சங்கம் சொல்கிறதே, விஜய் ஆண்டனி ஏன் "என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்" என சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிய சொல்கிறார் என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடக்காத தயாரிப்பாளர் சங்கம்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம், நடக்காத தயாரிப்பாளர் சங்கம் என இரு சங்கங்கள் உள்ளன. அதில், நடக்காத தயாரிப்பாளர் சங்கம் சொல்லும் எதுவுமே 4 நாட்கள் நீடிக்காது. தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு சிகரெட் வாங்கிக் கொடுக்க கூடாது என தடை போட்டனர். அடுத்த நாளே சிகரெட் விநியோகத்தை ஆரம்பித்தனர். எங்க படத்தை எப்படியாவது புரமோட் பண்ணுங்க என்றும் எங்க முகத்தை எப்படியாவது காட்டுங்க என கேமராவுக்கு முன்பு வந்து நிற்கும் தயாரிப்பாளர்கள் கேமராக்களை தடை செய்வதற்கு என்ன தகுதி இருக்கு? கண்டிப்பாக அதை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்.

Bayilvan Ranganathan opens up Ajith informs but, Vijay Antony not in recent meet

அஜித் சொன்னார் விஜய் ஆண்டனி சொன்னாரா?: நடிகர் அஜித்தின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். கேமராக்கள் வர வேண்டாம் என அஜித் சார் கோரிக்கை விடுத்தார். அதே போல கேமராக்கள் போகவில்லை. ஆனால், விஜய் ஆண்டனி அப்படி சொல்லவில்லை. அவருக்கு பதில், நீங்கள் ஏன் இப்படி சொல்றீங்க என சினிமாக்காரர்கள் கூடியிருந்த மேடையிலேயே பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அவரது பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X