Bayilvan Ranganathan - டேய் ராஜன் அந்த நடிகை என்ன அடிச்சாளா?.. பயில்வான் ரங்கநாதன் அதிரடி
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) நடிகை தன்னை அடித்ததாக கூறும் ராஜன் அதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவேன் என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரேகா நாயர். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.
கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.
ஒரு லட்சம் ரூபாய்: இந்நிலையில் ஒரு முறை பயில்வான் குறித்து பேசிய ராஜன் நடிகை ஒருவர் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக தாக்கினார் என்று கூறினார். அதற்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசிய வீடியோவில், "டேய் ராஜன். உன்னை நான் இனி டேய்னுதான் கூப்பிடுவேன்.ஒரு நடிகை என்னை அடித்ததாக சொன்னாய். அதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஏன் இப்படி புளுகுற. நானும் அந்த நடிகையும் சமாதானமாக போய்ட்டோம். இப்படி புளுகுனா புள்ளை, குட்டிங்க நல்லா இருக்காது ராஜன்" என்றார். இத வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











