நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார்.. உண்மையை முன்பே புட்டு புட்டு வைத்த பயில்வான்!
சென்னை : நயன்தாரா திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியதே நடந்துவிட்டது என நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.
நயன்தாரா இரட்டைக்குழந்தைக்கு தாயாகிவிட்டதாக செய்தி பரவியதை அடுத்து சோஷியல் மீடியாவே திணறும் அளவுக்கு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பலர் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறினாலும், சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணம் என்ன என கேள்வி கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா
ஆறு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த நயன்தாரா விக்கியும் கடந்த கடந்த ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திரைத்துறையே வியந்து போகும் அளவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தின் வீடியோ வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதனை வெறும் வழக்கமான திருமண வீடியோவாக வெளியிடாமல் இருவரின் காதல் கதை அடங்கிய ஆவணப்படமாக வெளியிட உள்ளது.

இரட்டை ஆண்குழந்தை
இதையடுத்து, இந்த நட்சத்திர ஜோடி இணையமே திணறும் வகையில் ஒரு தகவலை நேற்று வெளியிட்டது. அதாவது நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில், நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஒரு வீடியோவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் செய்து கொண்டாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார் என பேசியிருந்தார்.ஏன் என்றால், அவர் அதிகளவு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதால் அவருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்றார்.

தீர்க்கதரிசிதான்
அது மட்டும் இல்லாமல் நயன்தாராவுக்கு இன்னும் அதிகமாக சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது இதனால் அவர் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் என பயில்வான் கூறியிருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகி பயில்வான் ரங்கநாதன் சொன்னது நடந்து விட்டது உண்மையில் நீங்கள் தீர்க்கதரிசிதான் 6 மாதத்திற்கு முன்பே உண்மையை புட்டு புட்டு வைச்சீட்டீங்களே என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











