Rajini - ஒரு லிப் லாக் காட்சியில்கூட நடிக்காத ரஜினி.. என்ன காரணமாக இருக்கும்?.. ஓபன் செய்த பயில்வான்

சென்னை: Bayilvan Ranganathan On Rajini (ரஜினி பற்றி பயில்வான் ரங்கநாதன்) இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் ஒரு லிப் லாக் காட்சியில்கூட நடிக்காததற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பு, ஸ்டைல், பாடி லாங்குவேஜ் அத்தனையும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள்வரை அவரது தாக்கம் பரவியிருக்கிறது. அதனால்தான் சினிமாவில் நடிக்க வருபவர்கள் அனைவருமே ரஜினியின் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று ஆவல் கொள்கின்றனர்.

Bayilvan Ranganathan revealed the reason why Rajinikanth did not even act in a Single Liplock scene

உசுர கொடுக்க கோடி பேரு: சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சூப்பர் சுப்பு ஹுக்கும் என்ற பாடலை எழுதினார். அந்தப் பாடலில் குட்டி செவுத்த எட்டிப்பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு என்று எழுதியிருப்பார். அவர் எழுதியதுபடிதான் ரஜினிக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ரஜினி என்ன செய்தாலும் அதை ஃபாலோ செய்யும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

சிகரெட், மது: நடிக்க வந்த புதிதிலும், சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார்ந்த பிறகும்கூட ரஜினிகாந்த் மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அதை அவரே பல முறை சொல்லியிருக்கிறார். மேலும் அதற்காக விமர்சனத்தையும் பெற்றிருக்கிறார். இதனையடுத்து அந்த இரண்டு பழக்கங்களையும் விட்டுவிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இப்படி சில பழக்கங்களை கொண்ட ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில்கூட லிப் லாக் காட்சியில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன்?: இந்நிலையில் ரஜினி ஒரு படத்தில்கூட ஏன் முத்தக் காட்சியில் நடிக்கவில்லை என நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "ரஜினிகாந்த் 169 படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு படத்தில்கூட லிப் லாக் காட்சியில் நடித்தது இல்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?.. அந்த மாதிரி காட்சியில் நடித்தால் மக்கள் மத்தியில் தன்னால் நல்ல நடிகர் என்ற பெயரை எடுக்க முடியாது என திடமாக நம்பினார். அதனால்தான் நடிக்கவில்லை.

மனித பண்பு உள்ளவர்: முதன்முதலாக தன்னை வைத்து படம் தயாரித்த 14 தயாரிப்பாளர்களுக்கு படம் செய்து அதன் மூலம் வந்த பணத்தை கொடுத்தவர் அவர். அந்த அளவுக்கு மனித பண்பு உடையவர். நானும் அவருடன் மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பார். அதனால் மார்க்கெட் இழந்து இக்கட்டான நிலையில் இருந்த பிரபு, கார்த்திக்கு தன்னுடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X