Trisha :த்ரிஷா திருமணம் செய்யாததற்கு காரணம் இதுதானா.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடித்திருந்த 96 படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தது. படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்திலும் விஜய்யின் ஜோடியாக த்ரிஷா இணைந்துள்ளார்.

த்ரிஷா திருமணம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் : நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளாக தமிழில் முன்னணி நடிகையாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ஏறக்குறைய ரசிகர்களை கவர்ந்த வெற்றிப் படங்களாகவும் அமைந்து வருகின்றன. விஜய் சேதுபதியுடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்த 96 படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
இந்தப் படத்தையடுத்து த்ரிஷாவின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்திருந்தார் த்ரிஷா. இந்தப் படத்தில் குந்தவை என்ற முக்கியமான கேரக்டரில் இவர் நடித்திருந்தார். படத்தில் விக்ரம் மற்றும் ஜெயம் ரவியின் சகோதரியாகவும் கார்த்தியின் ஜோடியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். மிகவும் அழுத்தமான கேரக்டராக இந்த கேரக்டர் அமைந்திருந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து த்ரிஷாவின் அடுத்தப்படமும் சிறப்பாக அமைந்துள்ளது. நடிகர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது இணைந்துள்ளார் த்ரிஷா. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தப் படம் மூலம் விஜய்யுடன் த்ரிஷா இணைந்துள்ளார். இதையடுதது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற நிலையில், காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்திருந்தார்.
39 வயதாகும் த்ரிஷா, புத்தம் புது மலராக, தன்னுடைய இளமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார். அவரது திருமணம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் பேசிய த்ரிஷாவிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா, தன்னுடைய உயிர் ரசிகர்களுடையது என்று பதிலளித்தார். திருமணம் குறித்த அவரது இந்த மழுப்பலான பதில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனிடையே த்ரிஷா திருமணம் செய்துக் கொள்ளாததற்கு காரணம் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 39 வயதாகியும் த்ரிஷா திருமணம் செய்யாததற்கு காரணம், திருமணம் நடந்தால், தன்னுடைய விருப்பப்படி படங்களில் நடிக்க முடியாது என்பதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்ற நடிகைகளை போல, த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











